மா டீவி நிகழ்ச்சி (தெலுங்கு) ஒன்றில் கையில் மைக்குடன் பாடுவதற்கு தயாராக இருந்த அந்த குட்டிச்சிறுவன், எதிரே நிற்கும் SPB அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அழகாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் ‘நீ வயசு எந்த்த செப்பலேது ஸ்வாமி! என SPB அவர்கள் கேட்டவுடன் குழந்தைகளுக்குரிய வெட்கத்துடன் ‘தொம்மிதி’ (ஒன்பது)என சொல்லிவிட்டு கணீரென பாடி பலத்த கைத்தட்டல்கள் பெற்ற சிறுவன் தான் இவன். சாரி! இப்ப இவர்!
டீவி நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்து, சூப்பர் சிங்கர்ஸில் பிரபலமாகி சினிமா உலகிலும் காலடி எடுத்து வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பாடல்கள் பாடும் அந்த இளைஞர் தற்போது Subhasree Thanikachalam அவர்கள் இயக்கும் QFR (Quarantine From Reality) நிகழ்ச்சியின் பிரதான பாடகர்களில் ஒருவர். லட்சக்கணக்கான மக்கள் QFR நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் கவனமும் இவர் பக்கம் திரும்ப, நிறைய வாய்ப்புகள்.... அஜீத், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு பாடி விட்ட இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடி விட்டார். இசைஞானி இளையராஜா அவர்களின் ‘கதை கேளு’ நிகழ்ச்சியிலும் பாடுகிறார். இவரது கலை உயர்வுக்கு மேடையமைத்ததில் பெரும்பங்கு QFR க்கு உண்டென்பதை யாவரும் அறிவர்.
‘வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்’ என இவர் KJ யேசுதாஸ் அவர்களைப்போலவே அற்புதமாக பாட, நண்பர் Shyam Benjaminனின் பியானோ இசையும், Venkatasubramanian Mani வெங்கட்டின் தபலாவும் இப்பாடலை ( QFR-158 ) உச்சத்திற்கு கொண்டு சென்றது உண்மை. KJY அவர்கள் சும்மாவா சொன்னார் ‘இந்த பாடல் அவரது Top-5 பாடல்களில் ஒன்று என! வி.குமார் அவர்கள் இருந்திருந்தால் இவரை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்திருப்பார்.
ஜெயபார்கவியுடன் இவர் பாடிய ‘முள்ளில் ரோஜா’ (QFR-321) பாடல் இன்றும் QFRஇன் டாப்-20 பாடல் வரிசையில் இருக்கும் என சொல்லலாம். கியூபாவின் விவால்டி ஸ்டைலில் மேற்கத்திய இசையுடன் அமைந்துள்ள இப்பாடலின் நடுவே நம் கர்நாடக இசையை எட்டிப்பார்க்க வைப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். PBS அவர்களுக்கு சற்றும் குறையாமல் இவர் பாடியிருப்பார். ‘ரா…ரா..ர்ர’ என சரணங்கள் இல்லாது, குறிப்பிட்ட உணர்வை சொற்கள் ஏதுமின்றி வெறும் சுரக்கோவையாக, கண்கள் சொறுக ஆலாபனை செய்து அசத்தியிருப்பார் இவர்.
QFRஇல் இவர் அசத்தலாக பாடிய மற்றொரு பாடல் ‘பொன்னோவியம் கண்டேனம்மா’ (QFR-280), QFRஇன் முதல் வருட பிறந்தநாள் பாடல். The toughest song of QFR என்பார் சுபஶ்ரீ. இடையிசையில் வாத்தியங்களினூடே பாடகர்களின் harmonies எனும் விதவிதமான ஹம்மிங் இசை (லேயர்கள்) கலந்து இருக்கும். இவருக்கு அளிக்கப்பட்ட நான்கு லேயர்களின் ஒவ்வொரு ஹம்மிங் இசையையும் இவர் தனித்தனியாக பாடி, Shivakumar Sridhar (editor) அதை நேர்த்தியாக கோர்த்து விடுவார். பாடும்போது அந்த லேயர்களை வித்தியாசப்படுத்தி தனித்தனியாக திரையில் காட்டவதற்கென horizontal stripes மற்றும் vertical stripes கொண்ட சட்டைகளை அணிந்து பாடியிருப்பார் இவர்.
இப்பாடலை இளையராஜா போலவே அற்புதமாக பாடியிருப்பார் இவர். ‘காதல் காதல் காதல் தினம் தேனாகும்.. வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்’ என மிதமான ஸ்தாயியில் சரணத்தை துவங்கும் இவர், அடுத்து கொஞ்சம் மூச்சை இழுத்து (ரிஷிப்பிரியாவின் வரிகளின் போது) திடீரென ‘பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்’ என்று ஜிவ்வ்வ்வென மேல் ஸ்தாயியில் போய் நிற்பார். அத்தோடு நின்று விட மாட்டார். அந்த சரணத்தைத்தொடர்ந்து மறுபடியும் ‘லலால்லலா லா..லா..லா’ என மறுபடியும் பிட்ச்சை மேலே கொண்டு சென்று மெய்மறந்து, கண்கள் மூடி, கரங்களை கீழிருந்து உயர்த்தி, லயித்து பாடுவார் (அந்த ஷாட் தான் எனது ஓவியம்)
சமீபத்தில் பாடிய இவரது ‘பொட்டு வைத்த முகமோ’ (QFR-485) மற்றொரு அபாரமான பாடல்.
‘நான் பேச வந்தேன்’ (QFR-251) பாடல் இவரது excellence க்கு மற்றுமொரு உதாரணம். பாடல் வரிகள், வாத்திய இடையிசை, மிதமான பிட்ச்சில் பாடும் பாடகர்களின் குரல் எல்லாமே மனதிற்கு இதமாக குழந்தைக்கு தாலாட்டு பாடுவது போல இருப்பதாலோ என்னவோ முதல் சரணத்தில் இவர் (‘ஏழிசை பாடும் இமைகளிரண்டும்’) பாடும் காட்சியை எடிட்டர் சிவா தொட்டிலை தாலாட்டுவது போல rock செய்து காண்பிப்பார்.
இதைப்போலவே மற்றொரு தாலாட்டுப்பாடல் ‘ஒரு ராகம் பாடலோடு பாடல் கேட்டு’ (QFR-192)
‘நானென்றால் அது அவளும் நானும்’ (QFR- 412) மற்றும் ‘சின்ன மணிக்குயிலே’ (QFR-306) மற்றும் ‘அந்திமழை பொழிகிறது’என SPB பாடல்களை ஜமாய்த்திருப்பார் இவர்.
இவர் Sarath Santosh Tirumala!
கலை உலகில் நல்ல எதிர்காலத்துடன் சிகரம் தொட சரத்தை வாழ்த்தி பென்சில் ஓவியத்துடன்,
No comments:
Post a Comment