Sunday, June 22, 2025

மீரா ரவி

 சில வெளிநாடுவாழ் இந்தியர்களின் சமூக சேவை அளப்பறியது. பஹ்ரைன் நாட்டில் எனது நெடுநாளைய நண்பர் இவர். பெயர் மீரா ரவி. பல வருட அனுபவமிக்க சிறந்த பத்திரிக்கையாளர். கணவர் ரவியுடன் Salaam Bahrain எனும் பத்திரிக்கை நடத்துகிறார். அபாரமாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர். பஹ்ரைனுக்கு வரும் பிரபலங்கள் யாவரையும் நேர்க்காணல் செய்யத்தவறுவதில்லை இவர்.

பஹ்ரைனின் பிரதம மந்திரியோ அல்லது மன்னரோ வெளிநாடு பயணம் செய்யும்போது உடன் பயணிக்கும் முக்கிய பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருப்பவர். அத்தகைய பயணங்களில் பிரதமர் மோடி, வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பல அமைச்சர்களை சந்தித்து நேர்க்காணல் செய்திருப்பவர்.
தவிர நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) நிறுவனம் ஒன்றையும் கணவருடன் சேர்ந்து நடத்துகிறார். ஏராளமான பிரபலங்களை பஹ்ரைனுக்கு அறிமுகப்படுத்தியவர். நிறைய கலை நிகழ்ச்சிகளையும் அளிப்பவர். பஹ்ரைனில் பிரபல லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் (Lulu Group) சந்தைப்படுத்துதல் (marketing) சார்ந்த அனைத்து பணிகளும் இந்த தம்பதிக்கு புறமூலாக்கம் (outsourcing) செய்யப்பட்டு லுலு நிறுவனத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகிப்பவர்கள்.
சிறந்த தொழில்நுட்ப வல்லுனரான இவரது கணவர் ரவி ஒரு பட்டய கணக்காளர் (CA) மற்றும் என் நெருங்கிய நண்பரும் ஆவார். மனைவியின் வெற்றிக்குப்பின்னால் கொயட்டாக பணிபுரியும் ஆற்றல் மிக்கவர் 😁. இவரைப்பற்றி எழுத ஏராளமான சமாசாரங்கள் இருப்பதால் தனிப்பதிவே போடலாம்.
இவர்களது வெற்றிப்பாதையின் மற்றொரு மைல்கல் சென்றவருடம் இவர்கள் துவங்கிய பிரபல வட இந்திய ‘கைலாஷ் பர்பத்’ உணவகச்சங்கிலியின் பஹ்ரைன் உரிமம் (Franchise).
இரண்டு பொண்கள். திருமணமாகி இருவரும் லண்டனில் வசிக்க, பஹ்ரைனில் இவர் வெற்றிகரமாக சில,பல நிறுவனங்களை கணவருடன் நடாத்துகிறவர். எங்களது பஹ்ரைன் சி.ஏ சாப்டருக்காகவும் நிறைய நிறைய சேவை செய்திருக்கிறார்.
பஹ்ரைனை விட்டு நாங்கள் தாயகம் திரும்பும் முன் இவர்கள் இல்லத்தில் அளித்த பிரியாவிடை (Farewell) நிகழ்ச்சி மறக்க முடியாதது.
இன்முகத்துடன் பேசும் இனிமையான பாலக்காட்டுத்தமிழுக்கு சொந்தக்காரரான இவருக்கு பிறந்தநாள் இன்று.

No comments:

Post a Comment