ICWA மற்றும் சட்டப்படிப்பு முடித்து ஒரு நல்ல பொதுத்துறை நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நாம் என்ன செய்வோம்? அங்கேயே பல வருடங்கள் குப்பை கொட்டிக்கொண்டு, அவர்கள் கொடுக்கும் குவார்ட்டர்ஸில் குடியிருந்துகொண்டு, வருடம் ஒரு முறை LTCயில் அந்தமான் போன்ற இடங்களுக்கு பயணம் செய்துகொண்டு அப்படியே ரிடையர் ஆகி விடுவோம்.
இவர் வித்தியாசமானவர். திருச்சி செயின்ட் ஜோசஃப்ஸின் பி.காம் பட்டதாரியான இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் MBA படிப்பு மற்றும் இங்கிலாந்து வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறைமுகங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை (Ports management, operations & logistics) படிப்பு முடித்து, ICWA (Cost Accountantancy) படிப்புக்குப்பின் ஹாய்யா ரெஸ்ட் எடுக்கவில்லை. பாண்டிச்சேரி பல்கலைக்கழக சட்டப்படிப்பையும் முடித்தவர். அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தில்லி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் Competition Law எனப்படும் வணிகப்போட்டி சட்டம் சார்ந்த மேல்படிப்பையும் முடித்தவர்.
கடல், கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்த Indian Maritime University யில் 8 வருடங்கள் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் ஐக்கிய நாடுகள் (United Nations) திட்டத்தின் கீழ் இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து இந்திய துறைமுகங்களுக்கான செயல் திறன் கட்டுமானம் (Capacity Building) சார்ந்த பொருளில் துறைமுக மேலதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தவர்.
பிறகு IDFC எனப்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி நிறுவனத்தில் மூத்த இயக்குநராக 16 வருடங்கள் பணியாற்றி
அரசு துறைமுக நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), இந்திய திட்ட கமிஷன் (Planning Commission) மற்றும் உலக வங்கி போன்ற பெருநிறுவனங்களுக்கு ஆலோசகராக இயங்கியவர்.
மேற்படி அனுபவங்களுக்குப்பிறகு தான் இவர் விஸ்வரூபமே எடுத்துள்ளார்.
மத்திய, மாநில அரசாங்கங்களுக்காக PPP-Public Private Partnership எனப்படும் அரசு-தனியார் கூட்டுப்பங்கேற்பு சார்ந்த துறைகளில் சட்ட ஆலோசகர்.
துறைமுக நிறுவனங்களுக்கிடையேயான சட்டச்சர்ச்சை (Disputes)களுக்கு நடுவர் (Arbitrator) போன்ற உணர்திறன் பதவிகள் வகிக்கிறார். சாதாரண பணிகள் அல்ல இவை. பலகோடி முதலீட்டுத்திட்டங்கள் சார்ந்தவை. அதிக பொறுப்புகளும் கரணம் தப்பினால் மரணம் போன்ற தலைவேதனை பிடித்த பணிகள்.
National Shipping Boardஇன் இயக்குநர்.
உள்கட்டமைப்பு நிதி சார்ந்த கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் ஏராளமாக வெளியிட்டுகிறார்.
அரசு நிறுவனங்கள், IIM போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளில் உரையாற்றுகிறார்.
உத்தர்காண்ட் மாநில முஸ்ஸௌரி நகரில் உள்ள IAS Academyயில் IAS அதிகாரிகள், மத்திய, மாநில அரசு செயலாளர்களுக்கு (Secretaries) பயிற்சி அளிக்கிறார்.
இதையெல்லாம் விட, இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தது இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் ஆன்ட்ரூ முன்னிலையில் இவர் உரையாற்றியது தான்.
ஏராளமான நண்பர்கள் இவருக்கு. அதில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கு. கலகலவென பேசிக்கொண்டேயிருப்பவர். சரியான அரட்டை பேர்வழி.. திருச்சி ஶ்ரீரங்கத்துக்காரர். நெடுநெடுவென ஆறடிக்கு மேல் உயரத்துடன் பெரும் கூட்டத்திற்கு முன் மேடைகளில் உரையாற்றும் High Profile personality இவர்.
LinkedIn இல் இவரது ப்ரொஃபைல் பார்த்தால் அரண்டு போவீர்கள்.
No comments:
Post a Comment