இந்த 2021இலும் நாம் 1960-80 பாடல்களை இன்னும் முனுமுனுக்கிறோம் என்றால் அந்த பெருமை Subhasree Thanikachalam அவர்களுக்கு தான். பாடல்களை மேலோட்டமாகவோ அல்லது இசை,பாடல் வரிகள் மற்றும் குரல்களை ஒருசேர ரசித்தவர்கள் இனி QFR நிகழ்ச்சியை பார்த்த பிறகு பாடல் இசையை தனியாக கவனித்தும் பாடகர்களின் சங்கதிகளையும் தனியாக ரசித்தும் மகிழ்வார்கள். காரணம் ஒவ்வொரு பாடல் பிறந்த விதம் அல்லது அது உருவான அதன் பின்புலம், பாடல் இசையின் தனித்துவம், சில குறிப்பிட்ட வாத்தியங்களின் இசை (மாண்டலின் ராஜு etc ) அவை நமக்குள் ஏற்படுத்தும் சிலிர்ப்பு என சுபஶ்ரீ அவர்கள் அளிக்கும் அரிய தகவல்கள் இந்த QFR நிகழச்சியின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது என்பதில் ஐயமில்லை.
பாடல் காட்சிக்கேற்றவாரு பாடலை பாடும் பாடகர்களை பற்றி கூறி அவர் சிலாகிப்பது நமக்கு பாடலின் மேல் உள்ள ஈர்ப்பை அதிகரிக்கிறது அல்லவா! ( உதாரணம்: ‘தூது செல்ல ஒரு தோழி’ பாடலில் வெட்கத்துடன் பாடும் விஜயகுமாரி/சுசிலா மற்றும் துடுக்குடன் ‘என்ன செய்வதடி தோழி’ என அந்த ‘என்ன’வை தூக்கலாக்கி பாடும் புஷ்பலதா/ஈஸ்வரி)
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளிலிருந்து பாடகர்களை சுபஶ்ரீ அவர்கள் தொடர்பு கொண்டு ( வெவ்வேறு கால வித்தியாம் வேற!) ஒரு ட்ராக்கில் பாட, வாத்திய கலைஞர்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து இசையை புகுத்த, எல்லாவற்றையும் கலந்து சிவா எடிட் செய்ய, கடைசியில் அதில் தேவைப்பட்ட மாற்றங்களை சுபஶ்ரீ அவர்கள் செய்து, பாடலின் பின்புலம் சார்ந்த தகவல்களையும் சேர்த்து கடைசியில் நமக்கு கிடைக்கும் end product... மை காட்!
கடந்த ஒரு வருடமாக தவறாமல் இந்நிகழ்ச்சியை பார்க்கும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களும் (கலந்த தர வரிசை) என்னை பொருத்தவரை அதிக மதிப்பெண்களுக்கு தகுதியான பாடலையும் (பொன்னோவியம் கண்டேனம்மா) கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.
290(அத்தானின் முத்தங்கள்)
My fair lady பாடல் போல Broadway ஸ்டைலில் வசனமே பாட்டாக வரும் பாடலில் சுபஶ்ரீ அவர்கள் சொல்வது போல அந்த வசனத்தின் பேக் க்ரௌண்டில் வாசிக்கப்படும் ஸ்ட்ரிங்ஸ்.. சான்சே இல்ல
140(என்ன வேகம் நில்லு பாமா)
ஏ.எல்.ராகவன் அவர்கள் நினைவாக அவரது இந்த ‘வெர்சடைல்’ பாடலை நாராணன், சந்தோஷ் ஹரிஹரன் இருவரும் அதே இளமை மற்றும் குறும்புடன் பாட, இன்டர்ல்யூட் இசையை அச்சுத குமார், விக்னேஷ்வர், லக்ஷ்மண் மூவரும் சேர்ந்து அதகளம் செய்ய, எடிட்டிங் சிவாவை தனியாக உயர்த்தியிருக்கும் பாடல்.
193(வாடியம்மா வாடி)
மஹிதா ரிஷிப்ரியா இருவரும் பாடும் அந்தக்கால ராக் அன் ரோல் டைப் சடுகுடு பாடல். இன்டர்ல்யூட் இசை அச்சுத்(ஃப்ளூட்) வெங்கட்நாராயணன்(ட்ரம்ஸ்)
ஓவரால் (விக்னேஷ்வர்) பிரமிக்க வைப்பார்கள். எடிட்டிங் சிவாவுக்கு ஒரு மைல்கல் பாடல். மலைக்க வைக்கிறார்
89(ஹலோ மை டியர் ராங்நம்பர்)
எம்மெஸ்வி அவர்களின் சிக்நேச்சர் பாடல்களில் ஒன்றான இந்த பாடலை ஏசு தாஸ் மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் சளைக்காமல் பாடும் பத்மநாபன் மற்றும் ஶ்ரீநிதி.
115(தெரியாதோ நோக்கு)
வசுதா ரவி பாடும் மனோரமா அவர்களின் சோலோ பாடல்
207(பூந்தளிராட)
சிந்தூரியுடன் கோபால் ராவ் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். சுந்தரேசன் சார், ஷ்யாம், ஃப்ரான்சிஸ் சேவியர் குழு, லக்ஷ்மண், செல்வா மற்றும் சிவா எல்லோருக்கும் முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கலாம். பிரம்மாண்டமான கூட்டணி இசை அற்புதம்.
253(தூது செல்ல ஒரு)
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ராஜு அவர்களின் மாண்டலின் இசையுடன் அசத்தலுடன் ஆரம்பிக்கும் பத்மநாபன், சரணத்திற்கு முன் இழையும் சரோட் இசை, சுசிலா & ஈஸ்வரி இருவருக்கும் இணையாக பாடும் தீப்தி மற்றும் சௌந்தர்யா, காங்கோவிற்கு வெங்கட், லக்ஷ்மன் குட்டி
, ஹெட்ஃபோனில் கேட்டால் சிகரமாக தெரியும் ஷ்யாம், கண்களுக்கு குளிரூட்டும் எடிட்டங் சிவா..

பிரமிக்க வைக்கும் பாடல்.
250(பட்டத்து ராணி)
டீவியில் இந்த பாடலை பார்க்கும்போது நமக்கு ஶ்ரீநிதி தான் நினைவுக்கு வருவார். Rich sounding என சுபஶ்ரீ அவர்களே சொல்லி விட்டார்.
268(தேடினேன் வந்தது)
ஆரம்ப இசையில் கிடார் இசை சுந்தரேசன் சார், இன்டர்ல்யூடில் பியானோ, பாங்கோஷ், ஃப்ளூட் என்று ஷ்யாம், வெங்கட் மற்றும் செல்வா கலக்க, பாடலை ஷரண்யா பாடி அசத்துவார்.
291(காத்திருப்பான் கமலக்கண்ணன்) ஷாஸ்வதி குரலும் பிரியதர்ஷிணியின் நடனமும் பாடலை வேற லெவலுக்கு கொண்டு போகின்றன. ஐடியா எப்படி கன்சீவ் ஆச்சு சுபஶ்ரீ! வாழ்த்துக்கள்.
280(பொன்னோவியம்)
என்னைப்பொருத்தவரை அதிக மதிப்பெண்கள் பெரும் இந்த பாடலைப்பற்றி தனிப்பதிவாக பக்கம் பக்கமாக எழுத ஏராளமான சங்கதிகள் உள்ளன. ஷரத்தும் ரிஷிப்ரியாவும் A cappella ஸ்டைலில் தங்கள் குரலாலேயே இன்டர்ல்யூட் இசையை சரணங்களுக்கு நடுவே நிரப்புகிறார்கள். பாடல் முழுக்க ஷ்யாமின் கடுமையான உழைப்பும், சிவாவின் மெனக்கெடலும் பாடலுக்கு வலு சேர்க்கின்றன. சிறுவர்கள் லக்ஷ்மண் மற்றும் கார்த்திக் கிடார் இசை மற்றும் வெங்கட்டின் ரிதம் பேட் இசை head phoneஇல் கேட்க பிரமாதம். QFRஇன் Top 10 வரிசையில் இந்த பாடல் இருக்கும்.
இப்பதிவின் நீளம் கருதி இன்னும் ஏராளமான அற்புத பாடல்களை இங்கே குறிப்பிடவில்லை. நிறைய பாடகர்கள், வாத்திய கலைஞர்கள் பெயர்களும் குறிப்பிடவில்லை. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஏராளமான உழைப்புடன் இந்த நிகழ்ச்சியை நமக்கு அளிக்கும் சுபஶ்ரீ அவர்கள் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்படும் 3 Inseparables அல்லது 3 Musketeers ஆன ஷ்யாம் (programming மற்றும் keyboard), வெங்கட் (percussionist) & சிவா (எடிட்டிங்) என QFR Team இன் ஓவியத்தை வரைந்தளித்து, விரைவில் ‘QFR Mission 1000’ சென்றடைய சுபஶ்ரீ அவர்களை வாழ்த்தும்,
No comments:
Post a Comment