Subhasree Thanikachalam அவர்களின் QFR-340 (பாட வந்ததோர் கானம்) பாடலின் முழு ப்ரொக்ராமிங் செய்திருப்பது ரவிG. அப்பாடலில் முதல் சரணத்தின் இடையில் ‘அன்பே… ஏஏஏ..’ என ஏகாரத்துடன் தீபிகா அவர்கள் இழுக்க, தொடரும் ரவிஜியின் கீபோர்ட் இசை, மறுபடியும் ‘அன்பே எந்நாளும் நானுந்தன் தோழி..ஈஈஈ’ என்ற வரியைத்தொடரும் கீபோர்ட் இசையை உற்று கவனியுங்கள். ரவிஜியின் நேர்த்தியான இசையை காணலாம். (பாடலின் லிங்க் முதல் கமென்ட்டில்). QFR இல் நிறைய பாடல்கள் ப்ரொக்ராமிங் செய்திருக்கிறார்.
‘ஹோம் ஜாம்’ என இவர் முகநூலிலும் இன்ஸ்டிக்ராமிலும் பாடும் 90களின் தமிழ் பாடல்கள் சீரிஸ் ஈர்த்த பல லட்சம் ரசிகர்களில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒருவர். தெனாலி படத்தின் ‘போர்க்களம்’ பாடலை இவரது ஹோம் ஜாமில் கேட்டவுடன் அனிருத் தன் ‘வேதாளம்’ படத்தில் ரவிஜியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அப்புறம் அடுத்தடுத்து சினிமாப்பாடல்கள் குவிந்தன. ஷான் ரோல்டன், ஜி.வி.பிரகாஷ் இசை என வரிசையாக வாய்ப்புகள்.
சமீபத்தில் அனிருத் இசையில் இவர் பாடிய ‘நான் பிழை’ எனும் பாடலால் ‘ காத்துவாக்கில் ரெண்டு காதல்’ (விஜய் சேதுபதி+ நயன்தாரா) படத்திற்காக வெளியிட்ட இரண்டே நாளில் 30 லட்சம் ரசிகர்களை சுற்றி வளைத்து பிடித்தார் ரவிஜி.
மனைவி கல்பலதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. QFRஇன் முன்னனிப்பாடகிகளில் ஒருவர். சிறந்த கர்நாடக இசைப்பாடகி. குழந்தை சேத்தன் அப்பாவைப்போலவே பாடுகிறான். அதுவும் அட்சரசுத்தத்துடன் ஒரு எழுத்து பிசகாமல் மதுரமாக..
No comments:
Post a Comment