Subhasree Thanikachalam அவர்களது QFR-400 இல் சமீபத்தில் பெரும்பாலான பாடல்களில் இந்த இளைஞரை பார்க்கலாம். லச்சு குட்டியும் இவரும் மாறி மாறி ரிதம் அல்லது பேஸ் கிடாரை வாசிப்பவர்கள். இவர் கார்த்திக் (K Karthick).
தமிழ்நாட்டிலிருந்து போய் பம்பாயில் படித்து வளர்ந்து பெங்களூர் சிம்பயாஸிஸில் எம். பி.ஏ படித்து அங்கேயே வேலையில் இருக்கிறார்.
QFR-379 (நீ போகுமிடமெல்லாம் வருவேன்) பாடலில் இவரது கிடார் இசையில் கிறங்கியவன் நான். முதல் சரணத்துக்கு முன் வரும் இடையிசையின் கடைசி பாகத்தில் கார்த்திக் வாசிக்கும் அந்த சிறிய பீஸ் இசையை கேட்டுப்பாருங்கள். இந்த இடத்தையும் சுபஶ்ரீ அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஹேய் ஐ லவ் யூ.. ஐ லவ் யூ (QFR-387) பாடலிலும் இவரது பேஸ் இசை பாடலுக்கு உயிரோட்டத்தை கொடுக்கும்.
என்னை மிகவும் வியக்க வைத்த இவர் வாசித்த பாடல் ‘வான் மீதிலே இன்பத்தேன் மாறி பேயுதே’ (QFR-371). சுபஶ்ரீ அப்பாடலில் இவரது தனித்திறமையை குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார். ஒரு சின்ன கின்னத்தை கிடாரின் ஃப்ரெட் போர்டில் தேய்த்து ஹவாயென் கிடார் ஒலியை எழுப்பி அசத்தியிருப்பார் கார்த்திக்.
நிச்சயம் நல்ல எதிர்காலம் இவருக்கு உண்டு
No comments:
Post a Comment