கடல் அலைகள் கால்களை தழுவ, ஜீன்ஸ் பாண்ட், டெனிம் ஷர்ட்டுடன் ‘வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்’ என ஜிலேபியில் ஜீரா சொட்ட சொட்ட பாடுவார் இவர், SPB அவர்களைப்போலவே. (QFR-228- ஓ வசந்த ராஜா..)
சுந்தரேசன் சார், வெங்கட் மற்றும் லச்சுக்குட்டியின் அதகளமான ஆரம்ப இசைக்கும், சிந்தூரியின் ஆலாபனைக்கும் அடுத்து மரத்தடியிலிருந்து செகப்பு கலர்
சொக்காயுடன் ‘பூந்தளிராட.. பொன்மலர் சூட’ என அட்டகாசமாக பல்லவியை ஆரம்பிப்பார் இவர். (QFR-207)
ஏதோ ஒரு பூங்காவில் ஸ்ட்ரைப்ஸ் சட்டை, ஜீன்ஸுடன் சினிமா ஹீரோ போல ‘நான் கட்டில் மேலே கண்டேன் வெந்நிலா’ என பல்லவியை அபாரமாக ஆரம்பித்து (QFR-286)… அடுத்து ‘விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…’ வரியைத்தொடர்ந்து ஹோ(1)..ஓ(2)..ஹோ(3).. ஓ(4) என நான்கு ஷாட்டுக்கும் நான்கு விதவிதமான போஸ்களை Shivakumar Sridhar இன் வீடியோ மேஜிக் உபயத்தால் திரையில் நாம் காணும்போது ‘இதுவே சினிமா போல இருக்கே’ என மலைக்க வைக்கிறார் QFRயை நமக்கு அளிக்கும் Subhasree Thanikachalam .
மொட்டை மாடியில் தூரத்து பின்புலத்தில் கடல் அலைகள் உருண்டு வர ஸ்கை ப்ளூ கலர் சட்டையில் இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றி ‘எங்கங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ (QFR-122) என பல்லவியை ஸ்டைலாக ஆரம்பிப்பார். கொஞ்சம் இருங்க.. ‘ இரண்டாம் சரணத்தில் ‘கண்ணே.. உன்னை.. எண்ணி’ வரியில் ‘உன்னை’ என ஆள்காட்டி விரலால் நம்மை காட்டுவார். இதான் சார் இன்வால்வ்மென்ட் என்பது.
போதுவாக QFRஇல் இவர் பாடும் பாடல்களின் ப்ரொக்ராமிங் அனைத்தையும் இவரே பார்த்துக்கொள்வார். கீபோர்ட் முன் உட்கார்ந்து பாடலின் முகப்பிசை மற்றும் இடையிசையையும் வெங்கட்டின் தாள உதவியுடன் இவரே வாசிப்பார்.
என்னை மிகவும் அசந்து போக வைத்த பாடல், இவர் பாடிய ‘ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ (QFR-99) இல் முதல் சரணத்திற்கு (மஞ்சளின் மகராணி..) முன் இவர் வாசித்த இளையராஜாவின் அந்த பிரம்மாண்டமான சிம்ஃபொனி போன்ற இசை. வயலின்களும், ஃப்ளூட்டும், கீபோர்ட் மற்றும் இன்னபிற கருவிகள் கொண்டு ராஜா வாசித்த இந்த இன்டர்ல்யூடை இவர் ஒரே ஒரு கீபோர்ட் கொண்டு வாசித்து அதே அசல் இசையை நமக்கு கொண்டு வருவார். Hats off!
இன்னும் சொல்லிக்கொண்டே போவதற்கு நிறைய பாடல்கள்..
‘பூ விழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’ (QFR-163), ‘பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள’ ( QFR-325), ‘காத்தோடு பூ உரச (QFR-272), ‘நதியோரம் நாணல் ஒன்று (QFR-190) என நிறைய பாடல்கள்.
எல்லா பாடல்களுக்கும் Programmed, performed and mastered by Gopal Rao’ என்ற டைட்டிலில் பல பரிமாணங்களுடன் நம்மை பரவசப்படுத்துவார்.
சமீபத்தில் ஜெயா டீவியில் ‘மனதோடு மனோ’ நிகழ்ச்சியில் இவரது மற்ற மொழிப்பாடல்களையும் (குறிப்பாக ஹிந்தி) கண்டு வியந்தேன்.
தனியார் ஆல்பம், இசையமைப்பாளர், சினிமாபாடகர், விளம்பரப்படங்கள், சின்னத்திரை தொடர்களுக்கு இசை என பல்கலை வித்தகர்.
வாழ்த்துக்கள் கோபால்! Gops Rao
No comments:
Post a Comment