Thursday, June 2, 2016

ஜேஆர்

மூன்று நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பஹ்ரைன் வந்திறங்கிய அன்றே Cost Accountantsக்கான seminar இல் முதல் நாள் சிறப்பு விருந்தினராக கலந்து, லேட் டின்னர் முடித்து, ஹோட்டல் அறைக்கு பதினோறு மணிக்கு (இந்திய நேரம் இரவு ஒன்னரை) திரும்பி, கையோடு பெட்டியை திறந்து மனைவி Latha Raghu தானே வரைந்து ஃப்ரேம் போட்டுக்கொடுத்தனுப்பிய என்னுடைய உருவப்படத்தை என்னிடம் சமர்ப்பித்து, மறு நாள் அதே செமினாரில் ஒரு மணி நேரம் உரையாற்றி, க்யூஅன்டேயில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து, அன்று மாலை பாண்ட் டீஷர்ட்டுடன் இந்தியன் க்ளப்புக்கு பஹ்ரைன் வாழ் முகநூல் நண்பர்கள் புடைசூழ வந்து வாத்தியார் சுஜாதா பற்றி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றி, பின் வந்திருந்த தமிழ் அன்பர்களுடன் மேலும் ஒரு மணி நேரம் அளவலாவி, அதற்குப்பின் சரவனா பவனில் சங்கர், ராமகிருஷ்ணன் மற்றும் என் குடும்பத்தினருடன் டிபன் சாப்பிடும்போது ஶ்ரீரங்கத்து தேவதைகள் பற்றி விவாதித்து, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் சிறுவர்கள் சற்று ஒரு பக்கம் உடம்பை பதினைந்து டிகிரி சாய்ந்தவாறு, எதிரே வரும் தயிர்க்காரியை இடிப்பதற்காகவே ரோட்டில் ஓட்டுவது போல் நேராக போய் அவளை இடிக்க, தயிர் சட்டியெல்லாம் உடைந்து, சீட்டின் கீழ் கை வைத்து கூடவே ஓடி வந்தவர்கள் நாலாபுரமும் சிதறி ஓட, தயிர்க்காரி அவர்களது குடும்ப உறவுகளை திட்டியதை இவர் வர்ணிக்க எங்கள் முன் இருந்த ரவா தோசை எல்லாம் ஆறிப்போய், மறுநாள் மதியம் என் வீட்டிற்கு வருகை தந்து, லஞ்ச்க்கு அப்புறம் நண்பர்களுடன் கதைத்து, சவுதி சுரேஷ் சீனு தத்ரூபமாக வரைந்த இவரது காரிகேச்சரை ரசித்து, செல்ஃபி மற்றும் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, மாலை Chartered Accountants செமினாரில் பம்பாய் வாழ் தமிழ் ஐ.ஏ.ஐஸ் அதிகாரி ஒருவருடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு data security பற்றி உரையாற்றி, ஹோட்டலுக்கு திரும்பி, மறுநாள் என்னுடன் ஓரிரு நண்பர்களை பார்த்து விட்டு, லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் அமெரிக்கா பறக்கவிருக்கும் பையனுக்கு சட்டை, பெட்டி, இத்யாதி..மறக்காமல் மனைவிக்கு சடுதியில் புடவை ஒன்றை தேர்வு செய்து ( புடவை பார்த்து டிசைன் தேர்வு செய்து பண பட்டுவாடா செய்ய எடுத்துக்கொண்ட நேரம் மொத்தம் மூன்று மணி.. ச்சீ..சாரி.. மூன்றே நிமிடங்கள்), காரில் ஏறி பீக்கோ எக்ஸ்சேஞ்ச் போய் நண்பர் லக்ஷ்மி
நரசிம்மனிடம் டாலர்கள் மாற்றிக்கொண்டு, அந்த அரை மணியில் அவரடமே ஒரு பிசினஸ் ப்ரோபோசலையும் பிடித்து, அவசரமாக பிசினஸ் கார்டுகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டு, ஃப்ளைட் எத்தினி மணிக்கென விஜாரித்துக்கொண்டு, ஹோட்டலுக்கு விரட்டி, லாபியில் என்னை பத்து நிமிடம் மட்டும் காக்க வைத்து விட்டு லிஃப்ட்டில் மேலே ஓடி, பெட்டியை தூக்கிக்கொண்டு கீழே வந்து, மறக்காமல் எனது பஹ்ரைன் லோக்கல் மொபைலை திருப்பிக்கொடுத்து, லாபியிலேயே லஜ்ஜையாக என்னை அனைத்து நன்றி தெரிவித்து,, வாலே பார்க்கிங் கார் வரும் முன் அவசரமாக என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டு, ஏர்
போர்ட் போகும் வழியில் அழகான ஷிரிடி பாபா படத்தை எனக்கு பரிசாக அளித்து ( ம்.. சாரி...நீங்க ஷிரிடி பாபா டிவோட்டியான்னு தெரியாது), ஏர்போர்ட்டில் மறுபடியும் நன்றி தெரிவித்து, நெற்றியின் பக்கவாட்டில் விழுந்த
கேசத்தை செல்லமாக தள்ளி காதில் சொருகிக்கொண்டு டிபார்ச்சர் உள்ளே ட்ராலியை தள்ளியபடி ஓடி, தனது நெடும் பஹ்ரைன் பயணத்தை முடித்ததுக்கொண்ட 'ஜேஆர்' என அன்பொழுக நண்பர்களால் அழைக்கப்படும் Jayaraman Raghunathanஅவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment