Thursday, June 2, 2016

விக்னேஷ்

'அண்ணா! நான் ஆத்யம் சொல்லியிருந்தேனில்லியா'
'பிரமாதமா இருக்கு..அடிபொளி!'
'அந்த கல்லு மேல 'ச்சாடி' நின்னா தெரியறது'
ஆத்யம்...அடிபொளி.. ச்சாடி..இதெல்லாம் என்னாங்க?
பஹ்ரைனில் பாலக்காட்டைச்சேர்ந்த இளைஞர்கள் சிலர் எனது நண்பர்கள். அவர்கள் பேசும் பாஷை தான் மேற்சொன்னவை. 25 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பிரம்மச்சாரிகள் அல்லது புதிதாக கல்யாணமானவர்கள். 'எந்த ஊருப்பா' எனக்கேட்டால்...'பாலக்காடு, சாத்தபுரம், கொடுந்திரபுள்ளி, எடப்பாலம், கோவிந்தபுரம், சாலக்குடி, பெரும்பாவூர், மணப்பரா, குன்னங்குளம்...' என பதில் வரும்.
சிகரெட் வலிப்பதோ சீமைச்சாராயம் அருந்துவதோ மற்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத 'காமேஸ்வரன்கள்'.
'வெங்கடேஷ்! அக்கவுன்டன்ட் வேகன்ஸி ஒன்னு இருக்கு.. நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுப்பா' என சொன்னால் ஷெரிக்க அரை மணியில் குறைந்தது 10 'சீவீ'க்கள் வந்துவிடும். மிகவும் கன்னியமானவர்கள். வேலையில் கெட்டிக்காரர்கள். வார இறுதியில் நண்பர்கள் குடும்பத்துடன் சினிமா அல்லது பூங்காக்களுக்கு செல்வது இவர்களது பொழுதுபோக்கு.. தமிழ், மலையாளம், ஹிந்தி.. ஒற்ற சினிமாப்படம் பாக்கி இல்லா..
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு...எல்லா பூஜை, புனஸ்காரங்களும் தவறாமல் செய்பவர்கள்.
முக்கியமான பூஜை ஒன்றில் வாத்தியார் சுந்தர் 'அடுத்தது சாமவேதம் சொல்லனும்.. கூப்பிடுங்கோ அவங்களை' என அறிவித்த மறு நிமிடம் வெங்கடேஷ் (Venkat Ramanath) மற்றும் ஆனந்த் ( Anand Seshan ) இருவரும் முன்னுக்கு வந்து கனீரென்று 'ஒம்.. அக்னேய...என உச்ச ஸ்தாயியில் சாமவேத பாராயணத்தை ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்களுக்கு செம்ம வைப்ரேஷன் கொடுத்து புருஷ சுக்தத்திற்கு உட்கார்ந்துவிடுவார்கள்.
சபரிமலை மண்டல பூஜையென்றால் போதும்.. கழுத்து வரை புரளும் தலைமுடியை வழித்துச்சீவி பின்னுக்குத்தள்ளி முன்னே band மாட்டியோ அல்லது பின்ஜடைமுடிக்கு ரப்பர் பேண்டு போட்டு, புது மனைவியுடன் வந்து, முன் வரியையில் அமர்ந்து சத்தமாக பஜனை பாடல்கள் பாடும், சாந்தமே உருவான Murugan Narayanaswamy ஐ பார்க்க நமக்கு உள்ளம் உருகும்.
எல்லா ஐயப்பன் மற்றும் முருகன் பஜன் பாடல்களுக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் மிருதங்கம் வாசித்தும் சிறிதும் களைப்பே இல்லாமல் நடுநடுவே அசாத்தியமாக பஜனைகளும் பாடும் Anand Subramanyam மற்றொரு மல்ட்டி டேலன்ட்டட் ஆத்மி...
'ஹரே கிருஷ்ணா.. வாங்கோ..Pl come Prabhu' என எல்லோரையும் இஸ்கான் தாமோதர பூஜைக்கு அன்புடன் வரவேற்கும் ஜ்யோதி ப்ரபு (Mannapra Iyer Devesan ) இறுக்கமாக நம் கையை குலுக்கும்போதே அவரது ஆழ்ந்த அன்பு தெரியும்..
'பச்சை மயில் வாகனனே...' என மெதுவாக ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடத்தில் கழுத்து நரம்பு புடைக்கப்பாடி முழு கூட்டத்தையும் தன் வசப்படுத்தி, எல்லோரையும் தலையாட்டி துடையில் தாளம் போட வைக்கும் Krishnaswamy Viswanathan இன் ஹை டெசிபல் குரல் வளம்! ஆஹா..அபாரம்..
அடுத்து இப்பதிவின் நாயகன் Vignesh Peruvemba ..
கடந்த வாரம் எங்கள் இல்லத்தில் மஹா அவதார் பாபா ஜெயந்தி பூஜை நடத்தியது ஈயாளு விக்னேஷ்தான். கல்யாணமாகாத பிரம்மச்சாரி.. பஹ்ரைனில் ஒரு ஃப்ரைட் & ஃபோர்வேடிங் கம்பெனியில் சூபர்வைசர். 'ஶ்ரீதர் அண்ணா! பார்க்கிங் ஸ்தலம் கெடைக்கலையாக்கும்... இங்க பொறத்தே கிட்டி..' என போனில் விளிச்சு பரைஞ்ஞி அட்டகாசமாக தன் சகாக்களுடன் இவர் உள்ளே நுழைய பூஜை சும்மா களை கட்டியது. மிகவும் பொறுமையாகவும், ஸ்பஷ்டமாகவும் மந்திரத்தைச்சொல்லி, கணேச பூஜையில் ஆரம்பித்து கலச ஸ்தாபனம், ருத்ராபிஷேகம், சமகம், சுக்தங்கள், ஷிவா அஷ்டோத்தரம், பாபாஜி அஷ்டோத்தரம் என பூஜையை அருமையாக நடத்த, அவரது சகா ராம் (Ramesh Ram ) அவருக்கிணையாக கணீரென மந்திரங்களை சொல்ல, ' தேன் எங்கே.. நெய் எங்கே.. அந்த தேங்காய உடை, கின்னத்தில் கொறச்சு அரிசி மஞ்சள் வெள்ளத்தை விட்டு அட்சதை ரெடி பண்ணனும்' போன்ற இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் வரும் முன் எல்லாவற்றையும் ஏற்கனவே பட்டெந்நு தயாராக வைத்திருக்கும் Ananthnarayanan Veeraraghavan போன்றவர்களின் துணையுடன் விக்னேஷ் பூஜை நடத்திய விதம் மனதிற்கு திருப்தியாகவும் அனைவரும் அவரை தனியாக கூப்பிட்டு பாராட்டும்படியும் இருந்தது.
அதுசரி... இப்போ விக்னேஷ் எதனால் இப்பதிவின் நாயகன்? எதற்காக கரிக்கட்டியால் அவரது ஓவியம்?
புள்ளிக்கு இந்நு மேரேஜாக்கும்..அடாது மழை பெயினும் விடாது தாலி கட்டியவர்..
இனிய திருமண வாழ்த்துக்கள் விக்னேஷ்...

No comments:

Post a Comment