Sunday, July 19, 2026

Venkatram Anna Abudhabi

 முகநூலில் அதிக எண்ணிக்கையில் வாழ்த்து மடல்கள் (பிறந்தநாள்/மணநாள்) தயாரித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருப்பவர் யார் என்றால் முதல் இடம் இவருக்குத்தான். சுமார் எத்தனை க்ரீட்டிங்ஸ் போஸ்ட் செய்திருப்பார்!

சரி எண்ணிப்பார்க்கலாமென இவரது முகநூல் சுவற்றில் ஏறிக்குதித்து எண்ண ஆரம்பித்தேன். ஐநூறு, அறுநூறு தாண்டும்போது லேசாக வியர்த்து, கொஞ்சம் வேகமாக எண்ண ஆரம்பித்து ஆயிரத்தை தாண்டியது. சரி, போட்டோ ஸ்க்ரீனில் ஒரு வரிக்கு 3 வாழ்த்து மடல்கள் என, வரிகளை மட்டும் எண்ணினால் சீக்கிரம் முடிக்கலாம் என பார்த்தால் 1500 தாண்ட, ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்து விட்டு மீன்டும் எண்ண ஆரம்பித்தால் 2000 தாண்டியது. அந்த இடத்தில் தேதியைப்பார்த்தால் 2021ஆம் ஆண்டைக் காட்டியது. மறுபடியும் தொடர்ந்து எண்ண ஆரம்பித்து கிட்டத்தட்ட 3000…. 3500 .. இன்னும் போய்க்கொண்டிருக்க எண்ணுவதை நிறுத்திவிட்டேன். அது 4000 அல்லது 5000 என போய்க்கொண்டிருக்கும்.
யார் இவர்? காதிலிருந்து புகை கிளம்ப நான் பொறாமைப்படும் இன்னொரு நெய்வேலிக்காரர். எனது நீண்டகால வளைகுடா நண்பர். அபுதாபியில் CFOவாக இருக்கும் எனது நண்பனின் அப்பா. நான் பல வருடங்கள் பழகிய பம்பாய் நண்பர் ஒருவரின் அண்ணன். எனது பால்ய நண்பன் Ganapathi Subramanianனின் அத்திம்பேரின் சகோதரர். எனது குடும்பத்தின் நலனை பெரிதும் விரும்புபவர். எனது பையன்களின் பிறந்தநாளையும் விட்டு வைக்காமல் வாழ்த்து மடல் தயாரித்து அனுப்புபவர்.
பஹ்ரைனில் இருந்தபோது, ஒருநாள் அலுவல் நிமித்தம் அபுதாபி சென்றிருந்த சமயம் பையன் மணிகண்டனை அழைத்துக்கொண்டு ‘இப்ப எங்க இருக்கீங்க?’ எனக்கேட்டு, உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான ஷேக் ஜயித் மாஸ்க் வளாகத்தில் ஆச்சரியத்துடன் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த என்னையும் என் சக ஊழியரையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு தன் வீட்டிற்கு விரைந்து, நல்ல விருந்து படைத்தவர்.
மற்றொரு முறை ‘அண்ணா! அபுதாபி வந்திருக்கேன்’ என்று தெரிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர் வீட்டில் பூரி கிழங்கு, பொங்கல், சாம்பார், தயிர்சாதம், மைசூர் பாக் என மாயாபஜார் ரங்காராவ் போல எனக்கு முன் டேபிளில் எல்லா ஐட்டங்களும் வந்திறங்கின.
நெய்வேலி NLCயில் பணிபுரிந்த இவரது ஹாபி புகைப்படம் எடுத்தல். ஏராளமான நண்பர்களது போட்டோக்களை சேகரித்து வைத்திருப்பதால் வாழ்த்து மடலில் சாமி போட்டோ நாலைந்துடன் நமது புகைப்படம், இரண்டு மூன்று வரிகள் வாழ்த்து என அற்புதமாக கிரீட்டிங் கார்ட் தயாரித்து முதல் நாளே அனுப்பி விடும் வழக்கத்தை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார்.
தீவிர சாய் பக்தர் இவர். சாய் சத்சங்கங்கள் நடத்துவது, பேரன் பேத்தியுடன் அவர்களது ஓவியம் மற்றும் இதர கலைகளை ஊக்குவித்து, அபுதாபியில் மகன் இல்லத்தில் தன் மனைவியுடன் இனிமையாக பொழுதைக்கழிக்கும் இந்த 85 வயது இளைஞரும் எனது இனிய நண்பரான Venkata

raman Balasubramanian
அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள்

No comments:

Post a Comment