பஹ்ரைனில்… சர்க்கா 1996,97 இருக்கும்.. நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இவர் அடிக்கடி தெரிய ஆரம்பித்தார். எங்களது சிஏ அங்கத்தினர்கள் கூட்டத்தற்கும் வர ஆரம்பிக்க, மெல்ல ‘ஹலோ! நீ நல்லார்க்கியா.. நா நல்லார்க்கேன்!’ லெவலுக்கு இடைவெளியுடன் நண்பர்களானோம். உலகின் 5 தலைசிறந்த ஆடிட் ஃப்ர்ம்களில் ஒன்றான Ernst & Young இல் வேலையை துவங்கிய இளம் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட்.
அப்புறம் முதன்முறை இவரது வீட்டிற்கு போயிருந்தேன். அவங்க ஊர்ல இல்ல. டிப்பிக்கல் புதுமணத்தம்பதி வீடென்பதற்கான அடையாளங்கள். சிரித்த முகத்துடனே இருக்கும் புது மாப்பிள்ளை களை வேறு. சுவற்றில் தேங்காய் நார் பிள்ளையார், சில ஓவியங்கள் என மனைவியின் கைங்கர்யங்களை கண்கள் பிரகாசிக்க விளக்க, கல்யாணம் ஆகி ஒரு வருடத்திற்குள் இருக்குமென ஊகித்தேன்.
மனைவி புவனா Buni Srikanth ஊரிலிருந்து வந்ததும் தெரிந்தது, கலகலவென கணவருக்கும் சேர்த்து அரட்டையடிப்பவர் என. எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இனிய தம்பதியான இவர்களுக்கு ஏராளமான நண்பர்கள். எங்களது நட்புக்கு வயது இன்று 30 வருடங்கள். பாலக் கீரையை பூண்டுடன் வேகவைத்திறக்கி நிறைய தயிர்சேர்த்து புவனா செய்த ராய்த்தாவை சுவைத்து என் அம்மா அசந்து விட்டார்கள். திருச்சி சுந்தர் நகர் வரை அந்த ரிசிப்பி போய் விட்டது.
ஆடிட்டிலிருந்து இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் துறைக்கு மாறி பல வருடங்கள் Investcorp எனப்படும் வங்கி மற்றும் StandChart போன்ற பெரு நிறுவனங்களிலிருந்த பிறகு, சீஃப் ரிஸ்க் ஆபிசர் (CRO) என C-ஸூய்ட் எக்ஸிக்யூடவ் கேட்டகரியில் பஹ்ரைனின் பெரிய வங்கி என வெற்றிப் பாதையில் வலம் வந்தார். மணியான இரண்டு குழந்தைகள்.
உயர் பதவியிலிருந்தும் கால்கள் தரையில் பதிக்க, பதவிசாக, ‘அதாவது என்னான்னாக்க!’ என வளவளவென ஆரம்பித்து பேசாமல், சுருக்க பேசி, இன்னும் பேச்சிலர் (பேச்சு+இலர்) போல இளமையுடன் Chubbyயாக இருக்கும் அருமை நண்பன் Srikanth Sethuraman! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரோ!

No comments:
Post a Comment