தமிழகத்தில் சிறந்த தோல் மருத்துவர் இவர். எனது முகநூல் நண்பர். அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர். இலக்கிய ரசனை கொண்ட தமிழ் ஆர்வலர். காரைக்குடி செட்டிநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
srirangam sridhar
Sunday, July 19, 2026
Dr.Sundaram Murugusundaram
All Rise
2001, 2002 வாக்கில் இருக்கும்.. பஹ்ரைன் போய் ஏழெட்டு வருஷங்கள் ஆச்சு அப்ப. ஹூரா மற்றும் குதேபியா பகுதிகளில் குடியிருந்தோம். வீட்டை விட்டு வெளிய வந்தால் பர்கர் பீட்சா கடைகள், அரபி காபி ஷாப்கள், பொட்டிக்கடைகள் மற்றும் பொட்டீக் (Boutique )கடைகள், சிறிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், கோல்ட் ஸ்டோர் எனப்படும் சிறுமளிகைக்கடைகள் பரவலாக எல்லா ரோடுகளிலும் இருக்கும்.
All Rise எனும் முதல் பாடல் அது. இங்கிலாந்தின் டாப் 75 ஆல்ப வரிசையில் பல வாரங்கள் டேரா போட்டு கிடந்தது இந்த ஆல்பம். ரயான், கோஸ்டா, ஜேம்ஸ் மற்றும் சைமன் என்ற நால்வரணி கொண்ட குழு பாடிய பாடல் பட்டையை கிளப்பியது. பாடலின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் பாடல் வரிகள். குறிப்பாக ஐந்து முறை வரும் அந்த அனுபல்லவி.
குருசி
சுமார் 10 வருடங்களுக்கு முன் எனக்கு சென்னையில் அறிமுகமானவர் இவர். பார்த்த மாத்திரத்தில் இவரிடம் ஒளிந்துகொண்டிருக்கும் இவ்வளவு திறமைகளா என கண்டுபிடிக்கவே முடியாது. மன்மோகன்சிங், மணிரத்னம் போன்றவர்களுக்கே க்ளாஸ் எடுக்கும் அளவிற்கு Man of few words என சொல்லலாம்.
லேபக்ஷி (ஆந்திரா) ஒரு நாள் ட்ரிப்..
லேபக்ஷி (ஆந்திரா) ஒரு நாள் ட்ரிப்..
90 வயதைத்தொடும் சுசிலாம்மா
வா.. வா.. வா.. சுசிலாம்மா!
JayRaghu Birthday
பரபரப்புடன் டாக்டர் அவினாஷ் வந்தான்.
காமாட்சி ஶ்ரீதர்
இனிய பஹ்ரைனில் நகரின் மத்தியில் ஹூரா பகுதியில் மிகப்பெரிய காலி மைதானமொன்று பல வருடங்கள் இருந்தது. தினமும் அரபி பையன்கள் கால்பந்து விளையாடுமிடமாக இருக்க, ஒரு பணக்கார அரபியோ ஷேக்கோ அந்த இடத்தில் தரை மற்றும் முதல் தளம் மட்டும் கொண்ட மிகப்பெரிய கேட்டட் கம்யூனிட்டி ஒன்றை கட்ட, நகரில் உள்ள அனைத்து பெரிய வங்கிகள் அங்கே அபார்ட்மென்ட்டுகளை லீஸுக்கு எடுத்து அவர்களது சீனியர் மேனேஜ்மென்ட் பணியாளர்களுக்கு வீடு கொடுத்தது. அரபு நாடுகளுக்கே உரித்தான பொன்னிற பாலைவன மணல், அதாவது Golden Sands என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு வளாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘ஓ.. நீங்க கோல்டன் சேன்ட்ஸ்ல இருக்கீங்களா!’ என எல்லோரும் கேட்கும் அளவிற்கு அங்கு குடியிருப்பவர்களுக்கு ஒரு பெருமிதம்.
காமாட்சி ஶ்ரீதர் என நண்பர்களால் அறியப்படும் இவரது மனைவி கமாட்சி விருந்தோம்பலுக்கு உதாரணம் என சொல்லும் அளவிற்கு எங்களை கவனித்து டிபன் வைத்தார்.





