Sunday, July 19, 2026

காமாட்சி ஶ்ரீதர்

 இனிய பஹ்ரைனில் நகரின் மத்தியில் ஹூரா பகுதியில் மிகப்பெரிய காலி மைதானமொன்று பல வருடங்கள் இருந்தது. தினமும் அரபி பையன்கள் கால்பந்து விளையாடுமிடமாக இருக்க, ஒரு பணக்கார அரபியோ ஷேக்கோ அந்த இடத்தில் தரை மற்றும் முதல் தளம் மட்டும் கொண்ட மிகப்பெரிய கேட்டட் கம்யூனிட்டி ஒன்றை கட்ட, நகரில் உள்ள அனைத்து பெரிய வங்கிகள் அங்கே அபார்ட்மென்ட்டுகளை லீஸுக்கு எடுத்து அவர்களது சீனியர் மேனேஜ்மென்ட் பணியாளர்களுக்கு வீடு கொடுத்தது. அரபு நாடுகளுக்கே உரித்தான பொன்னிற பாலைவன மணல், அதாவது Golden Sands என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு வளாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘ஓ.. நீங்க கோல்டன் சேன்ட்ஸ்ல இருக்கீங்களா!’ என எல்லோரும் கேட்கும் அளவிற்கு அங்கு குடியிருப்பவர்களுக்கு ஒரு பெருமிதம்.

சொல்ல வந்தது, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இருக்கும் எனது நண்பர் ஶ்ரீதர் நடராஜன் அங்கே குடியிருந்தார். அபாரமாக பாடக்கூடியவர். மேடைகளில் ஜேசுதாஸ் மற்றும் SPB பாடல்கள் பாடி பிரபலமடைந்தவர். ஸ்மியூலில் கரோக்கி பாடல்கள் ரெகுலராக பாடுபவர். SP பாலு போலவே ராகங்கள், ஆலாபனைகள், சங்கதிகள், ஏற்ற இறக்கங்கள் என பாடல்களை பிச்சி உதறுபவர். நான் தாயகம் திரும்ப சில வருடங்கள் முன்பு இவரும் பஹ்ரைனை விட்டுக் கிளம்பி பெங்களூரில் செட்டிலானார்.
அமெரிக்க ஹனிவெல் எனும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் பணிபுரிந்து தற்போது வெஸ்டர்ன் டிஜிட்டல் எனும் மற்றொரு அமெரிக்க கம்பெனியில் இயக்குநர் மற்றும் கார்பரேட் ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் இவர்.
பெங்களூர் பெலந்தூர் பகுதியில் இவர் குடியிருக்கும் ஆதர்ஷ் பா(ல்)ம் ரெட்ரீட் வளாகம் நோக்கி காரை செலுத்த, மற்றொரு பஹ்ரைன்/இந்திய நண்பர் ஹரி-சுதா தம்பதியும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். செக்யூரிட்டி கேட்டை தாண்டியதும் எங்கள் பிரமிப்பு அடங்க கொஞ்ச நேரமானது. காரணம் அந்த பிரதேசமே அமெரிக்க சிலிகன் வேல்லி போல உயர் கட்டிடங்களும், வணிக வளாகங்கள், பூங்கா, மால், ஃபுட்கோர்ட் என எல்லாமே பிரம்மான்டமாக இருந்தது. பெங்களூரின் பாடாவதி ரோடுகள், ரோட்டின் மத்தியில் பதுங்கு குழிகள் எல்லாம் கடந்து வந்த எங்களுக்கு அந்த பகுதி முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
நவராத்திரி விஜயம் என்பதால் காபி, பக்ஷ்ணங்கள் மிக்சர் என நாங்கள் மொஸ்க்கிக்கொண்டிருக்க, இவரும் தனது மிக்சரை வெளியே எடுத்தார், ஆமாம், மியூசிக் சவுண்ட் மிக்ஸர். ஒயர்களை இங்குமங்கும் சொறுகி, மைக்கை பொருத்தி, அடுத்த ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்தது போல சினிமா கரோக்கி பாடல்களை பாடி அசத்தினார். அவரது அப்பா (80+) எங்களுடன் சேர்ந்துகொண்டு அரட்டையடிக்க நேரம் போனது தெரியவில்லை.
நெற்றியில் புரளும் உப்பு மிளகு கேசக்கற்றை, இரண்டுநாள் தாடி, முகத்தில்அணிந்திருக்கும் புன்னகை, ஆர்பாட்டமில்லாமல் பணிவுடன் பேசும் பாங்கு.. இதெல்லாம் நண்பர் ஶ்ரீதரின் அடையாளங்கள். மணியாக அவரது இரண்டு பையன்கள் சகஜமாக எங்களுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

காமாட்சி ஶ்ரீதர் என நண்பர்களால் அறியப்படும் இவரது மனைவி கமாட்சி விருந்தோம்பலுக்கு உதாரணம் என சொல்லும் அளவிற்கு எங்களை கவனித்து டிபன் வைத்தார்.
மனைவியிடம் ‘நேரமாச்சு.. கிளம்பலாமா?’ என கண் சைகை செய்வதை கவனித்து விட்ட இவர் ‘எங்க கிளம்பறீங்க? இப்ப நம்ப எல்லோரும் கீழே ஃபுட் கோர்ட் போறோம்’ என அறிவிக்க, சின்ன குழந்தைகள் போல ‘ஹே’ என கத்தினோம். ஆக்ச்சுவலி அவங்க வீட்லயே டின்னர் எதிர்பார்த்து தான் வந்தோம்ல!
சவுத் இண்டியன், பஞ்சாபி, கேரளா, கர்நாடகா என எல்லா பிரிவுகளும் கொண்ட பிரம்மாண்டமான ஃபுட்கோர்ட் அது. பானிபூரி, சோலே பட்டூரா, தோசா, ரவா இட்லி என ஆளாளுக்கு எல்லா திசைகளிலிருந்தும் வாங்கி கொண்டு வந்து குவித்து, சாப்பிட்டு, ஶ்ரீதரின் 80+ அப்பாவுடனும் ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு, இரவு பத்து மணிக்கு மேல் கிளம்பினோம்.

No comments:

Post a Comment