நகைச்சுவையாளர்கள் என்றால் பெரும்பாலும் ஆண்களே சட்டென நினைவுக்கு வருவது இயற்கை. பஹ்ரைன் இதற்கு விதிவிலக்கு. ஏராளமான எனது பஹ்ரைன் நண்பர்கள் மத்தியில் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களை வரிசைப்படுத்தினால் முதல் இரண்டு மூன்று நபர்களுக்குள் இருப்பவர் இவர்.
சென்னை பூர்வீகம் என்றாலும் டெல்லியில் வளர்ந்தவர். தமிழ் எழுதப்படிக்கத்தெரியாது. வீட்டில் தமிழ் பேசுவதால் ஸ்பஷ்டமாக தாய்மொழி பேசுபவர். ஹைதராபாத்திலும் சில வருடங்கள் வேலையில் இருந்தவர். ஒருமுறை தன் பாஸிடம் அலுவலக விஷயமாக இவர் ஏதோ சொல்ல அவர் உடனே ‘நேனு ரேப்பு சேஸ்தானு!’ என்றதுதான் தாமதம், பதறியடித்து ஓடி வந்து விட்டாராம். அப்புறம் தான் தெலுங்கில் ‘ரேப்பு’ என்றால் ‘நாளை’ என அர்த்தமென தெரிந்துகொண்டாராம்.
கணவர் ரங்கா (சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்) என் நெருங்கிய சகா. கணவரைப்போல இவரும் நிதி சார்ந்த படிப்பான ICWAI படித்தவர்.
95இல் பஹ்ரைனில் ஒரு பெரிய மேடை நாடகம் நடத்தினார்கள். அதில் இந்த தம்பதி பிரதான பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள். தற்போதும் மேடை நாடகங்களிலும் குறும்படங்களிலும் இவர் நடிக்கிறார்.
வருடாவருடம் நவராத்திரி சமயம் பிரம்மாண்டமான கொலு
இவர்கள் வைப்பார்கள், தரையில் இருந்து கூரை வரை. விதவிதமான கருத்துக்களில் ஏராளமான பொம்மைகளுடன் இவர்கள் அமைக்கும் கொலு பிரமிப்பூட்டுபவை. கைராலிக்காரனோ ஏஷியாநெட்டோ .. ஓடி வந்து வீடியோ பிடித்து இவர்களது நேர்க்காணல் என ஆரம்பித்து, அடுத்து இந்திய தூதுவர் (அம்பாசடர்) கூட வந்து அதிசயமாக பார்த்துவிட்டுப் போவார்.
இவர்கள் வைப்பார்கள், தரையில் இருந்து கூரை வரை. விதவிதமான கருத்துக்களில் ஏராளமான பொம்மைகளுடன் இவர்கள் அமைக்கும் கொலு பிரமிப்பூட்டுபவை. கைராலிக்காரனோ ஏஷியாநெட்டோ .. ஓடி வந்து வீடியோ பிடித்து இவர்களது நேர்க்காணல் என ஆரம்பித்து, அடுத்து இந்திய தூதுவர் (அம்பாசடர்) கூட வந்து அதிசயமாக பார்த்துவிட்டுப் போவார்.
பஹ்ரைனில் IFAS (இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின்) பிரதான அங்கத்தினரான இவர் அதன் கமிட்டியில் பல வருடங்கள் இருந்து சங்கத்தின் தலைவியாகவும் இருந்திருக்கிறார். சுதா ரகுநாதன், விசாகா ஹரி, சிக்கில் குருச்சரண், கன்னியாகுமாரி, கடம் கார்த்திக் போன்ற ஜாம்பவான்களை பஹ்ரைனுக்கு அழைத்து வந்து கச்சேரி பண்ண வைத்திருக்கிறார்.
அரிமா சங்கம் (லயன்ஸ் க்ளப்) போன்றவைகளிலும் செயலர் போன்ற உயர்பதவியில் இருந்து பஹ்ரைன் நிறுவணங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏராளமாக தொண்டாற்றுபவர்.
பஹ்ரைன் இண்டியன் லேடீஸ் அசோசியேஷனின் (ILA) தலைவியாக இருந்து நிறைய நிகழ்ச்சிகள், குறிப்பாக ILAவின் சிறப்புக் குழந்தைகள் நல காப்பகத்தை திறம்பட நடத்த உதவியவர்.
பெரியவள் மற்றும் பெரியவன் இருவரும் அமெரிக்காவிலும், கடைக்குட்டி இங்கிலாந்திலும் பணியில் இருப்பவர்கள்.

No comments:
Post a Comment