சுமார் 10 வருடங்களுக்கு முன் எனக்கு சென்னையில் அறிமுகமானவர் இவர். பார்த்த மாத்திரத்தில் இவரிடம் ஒளிந்துகொண்டிருக்கும் இவ்வளவு திறமைகளா என கண்டுபிடிக்கவே முடியாது. மன்மோகன்சிங், மணிரத்னம் போன்றவர்களுக்கே க்ளாஸ் எடுக்கும் அளவிற்கு Man of few words என சொல்லலாம்.
கோவையில் CIT பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பட்டப்படிப்பும் ஜாம்ஷெட்பூர் XLRIயில் முதுநிலை படிப்பும் முடித்து, Wipro போன்ற பெருநிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் திறம்பட செயல்புரிகிறார். அதுகுறித்த நிறைய பதிவுகளும் இடுகிறார்.
Man of few words என்று சொன்னேனல்லவா! ஆனால் நகைச்சுவை பிரவாகம் எடுக்கும் இவரது எழுத்துக்களில். சில வருடங்களுக்கு முன்பு சென்னை அடைமழைக்குப்பிறகு ‘மழை நின்னுப்போச்சு! தாய்மார்களே இனி நீங்கள் வடாம் பிழிய மொட்டைமாடிக்கு போகலாம்’ என முகநூலில் அறிவித்தவர்.
இவரது பதிவுகள் பிரமிப்பூட்டுபவை. ஆங்கிலப்புலமையை மேலும் வளர்த்துக்கொள்ள தரூர் போன்றவர்கள் இவரது வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறார்களாம்.
சென்னையில் நிகழும் இசை நிகழ்ச்சிகள் எதிலும் முதன்மையாக கலந்துகொள்பவர். அதுபற்றி சுவாரசியமாகவும் எழுதி புகைப்படங்களுடன் பதிவிடுபவர்.
ஆண்டவன் இவரை படைக்கும்போது மண்டை நிறைய மூளையை அடைத்த பின், கையில் மிச்சமிருந்த மூளையை வேஸ்ட் பண்ண விரும்பாமல் அப்படியே இவரது மண்டைக்குள் இன்னும் கொஞ்சம் திணித்து அனுப்பி விட்டார் போலும்.
10 வருடங்களில் சற்றும் மாறாத அதே இளமை இப்போதும் இவரிடம்.

No comments:
Post a Comment