தமிழகத்தில் சிறந்த தோல் மருத்துவர் இவர். எனது முகநூல் நண்பர். அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர். இலக்கிய ரசனை கொண்ட தமிழ் ஆர்வலர். காரைக்குடி செட்டிநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
சென்னை ஸ்கின் ஃபௌண்டேஷனின் சுகாதார இயக்குநர் மற்றும் சென்னை ஸ்கின் ஹேர் க்ளினக்கின் மூத்த தோல் மருத்துவரான இவரது podcast மற்றும் டிவி கலந்தாய்வு நிகழ்ச்சிகளில் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள்
முடி உதிர்தல், கேச பராமரிப்பு பற்றி ஏராளமான விளக்கங்களை நகைச்சுவை கலந்து சுவாரசியமாக கொடுப்பார். வெறும் மருந்து சாப்பிட்டு தலைமுடி உதிர்தலை சரியாக்கிக்கொள்ள நினைத்து வரும் மக்களுக்கு இவர் சொல்வது, மருந்து மட்டும் பயன் தராது, நல்ல போஷாக்கான உணவு உண்பதும் அவசியம் என்கிறார் இவர்.
‘இந்த வெந்தயம் அறைச்சு தலைல பூசிக்கிறாங்களே, அப்பறம் ஹேர்மாஸ்க் போட்டுக்கறது, அரிசி மாவு தேய்ச்சுக்கறது இதெல்லாம் பயன் தருமா?’ என கேட்டால் இவர் சொல்வது: ‘அரிசி மாவெல்லாம் அறைக்க நேரம் இருக்கா உங்களுக்கு! வெந்தயத்த சாப்பாட்டோட சேத்திக்கிட்டா அதோட பலன்கள் தானாவே தலைக்கு போகும், அதை விட்டுட்டு தலைக்கு தேய்ச்சு என்ன பிரயோசனம்? தலைக்கு என்ன வாயா இருக்கு?’
முடி கொட்டுவதே நம் உடம்பிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களின் அறிகுறி தானாம். அதாவது இரும்பு, கால்ஷியம், விட்டமின் போன்றவைகளின் பற்றாக்குறையை குறிப்பதாகும். அதற்கென உணவு வகைகளை உட்கொண்டால் போதும், முடி உதிர்தலை தடுக்கலாமாம்.
தினமும் தலை முடியை நீரில் அலசி அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரிப்பது, நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்பது, மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது, இந்த மூன்றையும் செய்யச்சொல்கிறார்.
போதிய அளவு தூக்கம், உடற்பயிற்சி, கவலையின்மை, மனதிற்கு பிடித்ததை செய்தல், மன அழுத்தமில்லாமல் இருத்தல் போன்றவற்றை செய்வது நம்மையே நாம் அக்கரையுடன் கவனித்துக்கொள்ளும் Self Love என்பதாகும் என்கிறார். இதற்குப்பின்பு தான் காதலி, கடலை போடுவதெல்லாம் வைத்துக்கொள்ளலாம் என்கிறார்.
அவ்வப்போது எனது பதிவுகளுக்கும் வந்து கமென்ட் கொடுப்பார் டாக்டர்.

No comments:
Post a Comment