இரண்டு நாட்கள்.. இரண்டு நண்பர்கள்.
சோஃபி வான் என்பவர் எழுதிய ‘Women of Good Fortune’ எனும் சீன நாவல். ஷங்காய் நகரில் மூன்று இளம் ஜிக்ரி தோஸ்த் பெண்கள் லுலு, ரினா மற்றும் ஜேன் ஒரு விபரீதமான திட்டம் தீட்டுகின்றனர்.
லுலு தன் ஆடம்பர திருமணத்தில் விருப்பமில்லாமல், கல்யாண மண்டபத்திலிருந்து GRT மொய்ப்பண பையுடன் மற்ற இரு கூட்டுக்களவாணி நண்பிகளுடன் எஸ்ஸாக முடிவெடுக்கிறாள். பணக்கார மாப்பிள்ளை வேணாம், அவனோட பணம் மட்டும் வேணுமாம்.
அடுத்தவள் ரினாவிற்கு அலுவலகத்தில் பல பிரச்னை, பதவி உயர்வு கிடைக்காமல் தனது எதிர்கால திருமணம் குறித்து கவலை! துட்டு வேணும் அவளுக்கும். மேரேஜை தள்ளிப்போட்டு, தாய்மை அடையும் வாய்ப்பை இழக்காமலிருக்க தன் கருமுட்டைகளை உறைய வைத்து பாதுகாக்க விரும்புகிறாள்.
மூன்றாமவள் ஜேன் குனிந்து பார்க்கும்போதெல்லாம் தன் தோற்றத்தை வெறுக்கிறாள், பிளாஸ்டிக் சர்ஜரிக்காக பணம் தேவை, யூஸ்லெஸ் கணவனை விவாகரத்து செய்து விட்டு ஆடம்பரம், சொகுசு வாழ்க்கை தேவை. அதுக்கு டப்பு காவாலி காதா!
திருடிய மொய்ப்பணத்தின் இடத்தில் கள்ளநோட்டுக்கள் வைக்கனும். அதற்கு ஒரு ஆளை பிடிக்கிறார்கள். தப்பி ஓட ஒரு வாகனம்/டிரைவரும் ரெடி.
சீனப்பெண்களுக்கு நன்றாக திருமணம் செய்து கொண்டு, வக்கணையாக சாப்பிடனும், நல்ல மனைவிகள் மற்றும் தாய்மார்களாகவும் இருக்க வேண்டும் என்ற மன அழுத்தம் எப்போதும்.
ஆச்சு! முகூர்த்தம் நெருங்க, மேளத்துக்கு சொல்லியாச்சு, கல்யாண சாமான்கள் வாங்கியாச்சு, தொங்குமீசை வாத்தியார் ரெடி என்ற நிலையில் திடீரென சதித்திட்டம் சிக்கலாகி, அவர்கள் நட்பில் லேசான விரிசல், அவர்களின் செயல்களின் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம், அதற்கான பெரிய விலை.. இப்படி போகிறது கதை!
இப்படியே போகட்டும்! மீதி கதைய நீங்களே படிச்சுக்கோங்க. ஏன்னா இந்த நண்பர்களைப்பற்றிய நாவலை படிக்க நினைக்கும்போது, என் இரு நண்பர்களுடன் முழுதாக இரண்டு நாட்கள் செலவழிக்கும் வாய்ப்பு வந்தால் விடுவேனா! நாவல் அப்றமேட்டுக்கு படிச்சுக்கலாம்.
காலை எழும்போது ‘ஷதாப்தில ஏறிட்டேன்டா’ என Ganapathi Subramanian னின் மெசேஜ். சட்டென நடைபயற்சியை முடித்து, குளித்து டிபன் முடிக்க, பங்கார்பேட் தாண்டியாச்சு என அடுத்த மெசேஜ். வியாசர்பாடி போல சிக்னலுக்கு அரை மணி நேரம் போட மாட்டான். கோலார், மாலூர் என நிற்காமல் இருட்டில் வொய்ட்ஃபீல்டும், ஹூடியும் விஷ்க்கென மங்கலாக மறைந்து சட்டென கிருஷ்ணராஜபுரம் வந்துவிடும்.
‘கேஎஸ்ஸார் ஸ்டேஷன் வரப்போகுது, நேரா தொட்டா(d) கணபதி டெம்பிள் வந்துடு’- மறுபடியும் மெசேஜ். பெங்களூர் வரும்போது பசவனகுடி தொட்டா கணபதியை சேவிக்காமல் போக மாட்டான் கணபதி. புதியதாக வாங்கிய கார்களுக்கு பூஜை செய்ய எப்போதும் கூட்டம் அலைமோதும் அங்கே. பிரம்மாண்டமான பாறையில் வடித்த பிள்ளையார். பக்கத்தில் சுடச்சுட பகாளாபாத் பிரசாதம். நண்பர் Sridharan Srinivasan குடும்பத்தார் வந்திருந்தனர் கணபதியுடன். முதல் நாளே கோவைக்கு திரும்பி விட்ட ஶ்ரீதரனை சந்திக்க இயலாமல் போய்விட்டது.
கோவிலையடுத்து சின்ன குன்றின் மேல் உள்ள ஆலயத்தில் Bull Temple எனப்படும் மிகப்பெரிய பாறையில் வடித்த மூலவராக நந்தி அருள்பாலிக்கிறார். சர்ரென காரில் குன்றின் மேல் பகுதியில் போய் நிறுத்தி ஆராம்சாக சேவிக்கலாம்.
பக்கத்துல பனஷங்கரில கிருஷ்ணா க்ராண்ட்ல சாப்பாடு நல்லா இருக்கும் என கணபதி சொல்ல, நேரே அங்கே போனோம். தாலிக்கு முன் தக்காளி சூப் அருமை. சின்னச்சின்னதாக நாலைந்து பூரிகள், சன்னா, சாதம், சாம்பார், பல்லியா, மைசூர் ரசம், ஜவ்வரிசி பாயசம், தயிர், ஐஸ்க்ரீம் என முடித்து அரக்கு கலரில் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் காபியையும் கணபதி ஆர்டர் செய்தான்.
கணபதியிடம் விடைபெற்று, வீடு திரும்ப போர் அடிக்கவே, பனஷங்கரியில் நண்பன் Suresh Kv யை சந்திக்க முடிவு செய்தோம். ‘சுரேஷ்! லஞ்ச் முடிச்சி தூங்கப்போறியா? நா பக்கத்துல தான் இருக்கேன். வரவா?’ என போனில் கேட்க, ‘அட வாடா.. வாடா.. நீயும் ஒரு தூக்கம் போடலாம் வா!’ என்றான் குதூகலத்துடன்.
அடுத்த ஏழெட்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. ஃபில்டர் காபியுடன் பஹ்ரைன் நண்பன் சுரேஷுடன் அவனது டியூப்ளே இல்ல மொட்டை மாடியில் கிரானைட் பெஞ்சில் அரட்டை ஆரம்பம். ஷேர் ட்ரேடிங், முதலீடுகள், இன்கம்டாக்ஸ், குழந்தைகள், உணவு பழக்கங்கள், டயட் உணவுகள், சுகாதாரம் என பல்வேறு டாபிக்குகளில் அரட்டைக்குப்பிறகு நைட்டுக்கு இட்லி/தோசை சாப்பிட்டு மறுபடியும் பஹ்ரைன் நாட்களைப்பற்றி பேசப்பேச….
‘டேய்! அந்த ரகு இப்ப எங்க இருக்கான்… இந்தியா திரும்ப வந்துட்டானா? அஹ்தியா கார்டன் வில்லால இருந்த வெங்கட் இப்ப எங்க இருக்கான்… எல்லா ரூமுக்கும் கண்ணாடி சுவர். கர்ட்டன் போட மாட்டாங்க. வெளிய இருட்டா இருக்கும். செக்யூரிட்டி எங்கியோ தூரத்துல இருக்கும். வீடு சுத்தி மரம்.. ஊ..ஊ.ன்னு காத்து… கொஞ்சம் பயமா இருக்குமே அந்த காம்பௌண்ட்’ என பேச்சு அந்த பிரம்மாண்டமான வில்லாக்களைப்பற்றி பேசும்போது இந்த சம்பாஷணையும் வந்தது.
‘உனக்கு தெரியுமா? அதுக்கு பக்கத்து காம்பௌண்ட்ல வெள்ளக்காரன் ஒருத்தன் குடியிருந்தான் ஞாபகம் இருக்கா? டாட்ஜ் சாலஞ்சர் வச்சிருப்பானே!
‘கேள்விப்பட்ருக்கேன்டா. அவம்பொண்டாட்டி டுகாட்டி பைக்ல போவாளே’
‘அதே ஃபேமிலி தான். ஃபுல் கண்ணாடி வீடு. அவங்க வீட்டை சுத்தி பெரிய மரம், திக்கா செடிங்க இருக்கும். வீட்ல யார் இருக்காங்கன்னே வெளியர்ந்து பாக்க நமக்கு தெரியாது. ஃபுல்லி கவர்டு.’
‘ஏன்டா அப்பிடி?’
‘ஏன்னா, வீட்ல இருக்கறப்ப அவங்க ஒன்னும் போட்டுக்க மாட்டாங்களாம்’
No comments:
Post a Comment