Sunday, July 19, 2026

JayRaghu Birthday

 பரபரப்புடன் டாக்டர் அவினாஷ் வந்தான்.

‘ஆவ்ரில்! பெரியவர் மூட் எப்பிடி இன்னிக்கி?’
‘டோன்ட் ஆஸ்க் மி. ஹி ஈஸ் க்ராங்க்கி டுடே?’
‘என்னாச்சு?’
‘இன்னாச்சுன்னு தெர்ல மேன். ஹி ஈஸ் ஜஸ்ட் யெல்லிங் அட் எவ்ரிவொன்’
‘சாப்டீங்களா?’
‘ஜீசஸ்! ஐ’ம் ஜஸ்ட் ஆன் மை ட்டோஸ் ஸின்ஸ் மார்னிங். துன்ன கூட நேரமில்ல’.
பெரியவர் உள்ளே இருந்து ஆவ்ரிலை கூப்பிடுகிறார்.
‘ஆவ்ரில்! அந்த குப்தா பொண்டாட்டிக்கு ஸ்ட்ரெஸ் டெஸ்ட் பண்ணியாச்சா?’
‘ஆல் டன் டாக்டர். ட்ரெட்மில் ஆச்சு. ஷி டைம்ட் 11 மினிட்ஸ். புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு வாங்கிச்சு, நிறுத்திட்டேன்’
‘அதிருக்கட்டும்.. டார்கெட் ஹார்ட் ரேட்?’
‘85% பண்ணீருச்சு அந்த பொம்ள’
‘குட். டாப்ளர் எக்கோ?’
‘அல்லாம் ஆச்சு. நார்மல் ப்ளட் ஃப்ளோ, நார்மல் ஹார்ட் ஸ்ட்ரக்ச்சர் அன்ட் வால் மோஷன்.’
‘பெரிகார்டியல் எஃப்யூஷன்?’
‘பாத்தாச்சு, நோ விஸிபிள் க்ளாட், நோ எக்ஸெஸ் ஃப்ளூயிட் பில்ட் அப்’
‘க்ரேட். அந்த ப்ளகாட் அவினாஷ் அடுத்த வாரம் லீவுல போனாலும் நீ நல்லா மேனேஜ் பண்ணுவே’
‘தேங்க்யூ டாக்டர்’
‘சரி! அவினாஷ் என்ன ப்ரிஸ்க்ரைப் பண்ணான்?’
‘ரோசுவாஸ்டாட்டின் 20எம்ஜி’
‘சொச்சம்?’
‘ஆஸ்ப்ரின் 150’
‘150 வேண்டாம். 75எம்ஜி போதும். ஆஞ்சியோப்ளாஸ்டி பண்ணியே15 வருஷமாகுது. அவினாஷுக்கு இதெல்லாம் தெரியாதா? வெறென்ன போட்ருக்கான்?’
‘வேற ஒன்னியும் இல்ல டாக்டர்’
‘ டாமிட்! BPக்கு டெல்மிசார்ட்டன் 20எம்ஜி சேர்க்கலையா? நாளைக்கி ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா அவங்க புருஷன் குப்தாக்கு யார் பதில் சொல்றது?
‘ இல்ல டாக்டர். ஷி ஹேஸ் லோ BP ஆல்வேஸ்’
‘ அது எனக்கு தெரியும். டிஸ்பைட் தட் அவங்க BP டாப்ளட் எடுத்துக்கனும்.. அ பார்ட் ஆஃப் மெடிகல் ப்ரூடன்ஸ். அவினாஷை நீட் எக்ஸாம் எழுதச்சொல்லு. ரிப்போர்ட்ஸை கொண்டா, பாத்துடறேன்’
‘ஓகே டாக்டர். ஒரு சின்ன கொஸ்டின்.. கேன் ஐ?’
‘கோ அஹெட்’
‘இல்ல.. வந்து.. காலேலர்ந்து யூ சீம் டிஸ்டர்ப்ட்’
‘அதுவா? இன்னிக்கி என்ன தேதி?’
‘நொவெம்பர் இலெவன்.. சாரி.. ட்வெல்வ்’
‘ரெண்டு வேலை செய்யச்சொன்னேன் உன் கிட்டே.. யூ ஃபர்காட்?’
‘அது வந்து.. என்ன வேலை! ஓ.. அயாம் சோ சாரி டியர். மால்புவா ஒரு கிலோ வாங்கச்சொன்னீங்க. தி அதர் வொன் ஈஸ்.. அந்த ஶ்ரீதர் சீதாபதிய வுட்டு ஒரு கார்ட்டூன் வரைஞ்சி உங்க ஃப்ரெண்ட் ஜெ.ரகுநாதனுக்கு அவருக்கு புடிச்ச மால்புவாவோட க்ரீட்டிங் அனுப்பச்சொன்னீங்க. யூ செட் டுடே ஈஸ் ஹிஸ் பர்த்டே’
பி.கு:
ஆவ்ரில் அந்த மால்புவா ஸ்வீட் டப்பாவையும், ஶ்ரீதர் வரைந்த கார்ட்டூனையும் Jay Raghu விற்கு அனுப்பியாச்சு (படம் பார்க்க)

No comments:

Post a Comment