Thursday, July 30, 2015

Raveendran...

நண்பர்கள் Tiruchendurai Ramamurthy Sankar மற்றும் Suresh Seenuமூலம் இவர் எனக்கு முகநூலில் அறிமுகமானவர். இருவருக்குமே நெருங்கிய உறவினர் கூட.
சென்ற மாதம் சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் முதல் நாள் இவருடன் வெகு நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் இரவு பஹ்ரைன் கிளம்ப வேண்டும். கிடைத்த அந்த இரண்டு மணி நேரத்தையும் வீணாக்க விரும்பாமல் மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் 8 மணிக்கு இவரை சுரேஷ் சீனுவுடன் சந்திப்பதாக முடிவு செய்தோம்.
இரவு சரியாக 8 மணிக்கு ஹோட்டலை நெருங்கும்போது 'நான் வந்தாச்சு.. ரிஸப்ஷன்ல இருக்கேன்' என இவரிடமிருந்து போன். சென்னை போன்ற பிசியான நகரத்திலும் சொன்ன நேரத்துக்கு ஆஜரா!
பிருந்தாவன் பகுதியின் ஒரு மூலையில் இடத்தை தேர்வு செய்து அமர்ந்ததும் நண்பர் சுரேஷிடமிருந்து போன், தான் வர இயலவில்லையைன.
சுமார் ஒரு மணி நேரமே இவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தன்னைப்பற்றி சுருக்கமாக தெரியப்படுத்திக்கொண்டு என்னைப்பற்றியும் விசாரித்துக்கொண்டார். என்னுடைய பதிவுகளை தவறாமல் படிப்பதாகவும் எனது எழுத்துக்களையும் வெகுவாக பாராட்டினார். அந்த பாராட்டில் பொய் எதுவும் இல்லாமல் மனதாரவும் வாழ்த்தினார்.
இந்தியாவில் அநேகமாக எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறார். ஒரு பிரபல நிறுவனத்தின் டெரிடரி விற்பனையனைத்தையும் தன்கீழ் வைத்திருக்கும் இந்த மனிதரிடம் அந்த ஒரு மணி நேரத்தில் நான் கற்றது:
1. எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் சாதாரண மனிதனாக எளிமையாக இருப்பது ( 10 க்ரெடிட் கார்டுகளுடன் மொத்தமான மணி பர்ஸ் மற்றும் 25 சாவிகளுடனான கார் கீ செயின், இரண்டு ஸ்மார்ட் போன்கள் எல்லாவற்றையும் கடமுடாவென டேபிளில் நம் எதிரே குவித்து விட்டு உட்காரும் மனிதர்கள் மத்தியில்)
2. 'You know...when I was the Country Manager of Brittania....' என பீலா விடும் மனிதர்களுக்கு நடுவே எந்த ஆர்ப்பாட்டமுமில்லாத இவரது அமைதியான பேச்சு...
3. 'எனக்கும் நிறைய எழுதனும்னு ஆசை... ஆனா எனக்கு பழக்கமில்ல...' என மிகவும் சகஜமாக வெளிப்படுத்தும் இயல்பு...
இரவு 12 மணிக்கு ஏர்போர்ட் போக வேண்டும், அடுத்து நாலைந்து மணி நேரம் பிரயாணம் என்பதால் கொஞ்சமாக சாப்பிடுவேங்க என்ற என்னை அதிகம் கட்டாயப்படுத்தாமல் 'நீங்க எவ்வளவு கொஞ்சமானாலும் சாப்பிடுங்க.. பரவாயில்ல.. ஆனா சூடான குலாப்ஜாமுனுடன் விடை பெறலாமே' என்ற அவரது அன்பான உபசரிப்பால் திக்குமுக்காடிப்போனேன்.
உட்லண்ட்ஸ் விட்டு வெளியே வரும்போது பேச்சின் நடுவே எங்களது வயது பற்றி பேசும்போது 'என்ன...எனக்கு 54 ன்னா இவருக்கும் கிட்டத்தட்ட அதே வயசு தான் இருக்கும்' என ஊகித்து அவரிடம் கேட்டபோது 'நீங்களே guess பண்ணுங்க' என்றார்.
'என்ன உங்களுக்கு ஒரு 54..55 இருக்கும்... பையன் காலேஜ் முடிச்சுருப்பான்.. பொண்ணு கொஞ்சம் லேட்டா பொறந்து இந்த வருசம் 10th படிக்கிறா.. கரெக்டா?' என அதிகப்பிரசங்கி மாதிரி கேட்ட என்னிடம், பிரகாசமான முகத்துடன் ' அய்யோ... எப்பிடி இவ்வள கரெக்டா guess பண்றீங்க!' என சொல்வாரென எதிர்பார்த்தேன்.
அமைதியாக சொன்னார்...
' பையன், பொண்ணு ரெண்டு பேரும், படிச்சு முடிச்சு வேலைக்கு போறாங்க' ( ந்நங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி இரு
ந்தது எனக்கு)
' ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயாச்சு' (பளார்... பளார்)
' நானும் தாத்தா ஆயிட்டேன்' ( இப்ப.. நானு எங்க இருக்கேன்!)

No comments:

Post a Comment