சிலருக்கு இவர் 'Norwich Union ஶ்ரீனிவாசன்' .....சிலருக்கு 'Kanoo ஶ்ரீனிவாசன்'. எங்களுக்கு எப்பவும் 'சுதா ஶ்ரீனிவாசன்' (Sudha Srinivasan)...
80களில் பஹ்ரைன் வந்தவர்களுக்கு பெரும்பாலும் சுதா ஶ்ரீனிவாசன் தம்பதிகளை தெரியாமலிருக்காது. Kanoo எனப்படும் குழுமத்தின் நார்விச் யூனியன் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் (தற்போது Axa Insurance) 25 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ஶ்ரீனிவாசன்.
94இல் நான் பஹ்ரைன் வந்த புதிதில் டிரைவிங் லைஸென்ஸ் மற்றும் ஃபேமிலி விசா கிடைப்பதென்பது கனடாவுக்கு குடியுரிமை கெடச்ச மாதிரி. உடனே நண்பர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள். (தற்போது கனடா விசா என்பதே டிரைவிங் லெசென்ஸ் எடுப்பது மாதிரி Narayanaswamy Iyerr), மூர்த்தி (Rk Murthyy ), மற்றும் பீக்கோ(Bahrain India Exchange Co) லக்ஷ்மி நரசிம்மன், மற்றும் கணேஷ் Krishnamurthy Ganesamurthyy , Bhawani Narayanann) மூலமே எங்களுக்கு சுதா & ஶ்ரீனிவாசன் தம்பதிகளின் நட்பு கிடைத்தது.
). சுமார் 9 மாதங்கள் ஃபேமிலி விசா கிடைக்காமல் பிரம்மச்சாரிகளுடன் தங்கியிருந்தபோது சக ரூம்மேட்கள் ஸ்வாமி
பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் வைபவங்களுக்கும், வார இறுதியிலும் வீட்டு சாப்பாடு சாப்பிட பிரம்மச்சாரிகள் நாங்கள் ஐந்தாறு பேர் அஜராகிவிடுவது வழக்கம். இவர்கள் மூலம்Hariharan Subramaniann,Sudha Hariharann போன்ற அருமையான நண்பர்களின் அறிமுகமும் அப்போது கிட்டியது.
குடும்ப விசா கிடைத்து பெரியவனுடன் (இரண்டு வயது) உஷா பஹ்ரைன் வந்திறங்கிய அன்றே சுதா ஶ்ரீனிவாசன் வீட்டில் சாப்பாடு. புதிய ஊருக்கு வந்திறங்கிய மனைவிக்கு என் நண்பர்களின் ஆதரவும் சுதாவின் கரிசனமும் மிகவும் பிடித்துப்போனது. சுதாவும் உஷாவும் ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை செய்தவர்கள்.
கம்பெனியின் அடிமட்ட கணக்காளனான என்னையும் 'சொல்லுப்பா ஶ்ரீதர்.. வா இப்பிடி பக்கத்துல வந்து உக்காரு ..' என வஞ்சையோடு அழைத்து பேசும் ஶ்ரீனிவாசன் படாடோபமில்லாத மனிதநேயமிக்கவர். எனது ஓவியங்களின் பரம ரசிகர். பல வருடங்கள் யோகா பயிற்சி செய்பவர். ஏராளமான பஹ்ரைனி நண்பர்கள் அவருக்கு. அலுவலகத்தின் சக-அலுவலர்களான பஹ்ரைனிகளும் அவரிடம் யோகா கற்றுக்கொள்ள வருவது வழக்கம். நிறைய இளைஞர்களுக்கு அவரால் வேலை வாய்ப்பு. ஆர்ப்பாட்டமில்லாத, அளவான, அமைதியான, தெளிவான பேச்சு. கம்பெனியின் உயர்பதவியிலிருந்து ரிடையராகி சில வருடங்கள் முன் புனே திரும்பினார்கள்.
பஹ்ரைனிலிருக்கும் தமிழர்களின் ஜனத்தொகையை தெரிந்துகொள்ள விரும்புவோர் நவராத்திரி கொலுவின்போது சுதா வீட்டிற்கு வந்ததாலே போதும்.
தற்போது குழந்தைகள் இருவரும் பஹ்ரைனிலேயே வேலை கிடைத்து இங்கே இருப்பதால் மறுபடியும் இத்தம்பதிகளை கடந்த இரு வருடங்களாக சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு. பெரியவன் சுஷில் உஷாவின் மாணவன். பைலட் படிப்பு முடித்து தனியார் விமான கம்பெனியில் வேலை.
பெண் ஶ்ரீரஞ்சனி பஹ்ரைனில் படித்தவள். அதிகம் வாய்திறக்காத கூச்ச சுபாவமுள்ளவள். எப்போதாவது வாயைத்திறந்து பேசினாலும் 'நச்' என அறிவுபூர்வமான பதில் வரும். (உதாரணத்திற்கு: பல வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் பஹ்ரைன் ஜல்லாக் கடற்கரையில் கழித்தபோது நண்பரின் மனைவி எல்லா குழந்தைகளுக்கும் பலூன் அல்லது பொம்மை போன்ற ஏதோ ஒரு பரிசு கொடுக்க, பத்தே வயதான ஶ்ரீரஞ்சனி தன் வயதிற்கு அந்த பரிசு சிறியது என்பதை 'Aunty.. I am too big to get this gift' என்று சொல்லி அசத்தினாள்). பூனே சிம்பயாசிஸ் சட்டக்கல்லூரியில் படித்து தற்போது பஹ்ரைனின் சிறந்தவொரு சட்ட ஆலோசகர்களிடம் வேலை. எங்கள் கம்பெனி Trafcoவிற்கான வழக்கு ஒன்றையும் பார்த்துக்கொள்கிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. அவளுடைய பாணியில்: she is too small to get such a good job.
சென்றவாரம் அவர்களில்லத்தில் ஒரு மணி நேரமும், நேற்று மாலை எங்கள் இல்லத்திலும் சுதா ஶ்ரீனிவாசன் தம்பதியருடன் பழைய பஹ்ரைன் நாட்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரத்தில் நிறைய தொலைபேசி அழைப்புகள். அவரது பழைய CEO மற்றும் அரபி நண்பர்களிடமிருந்து இல்லத்திற்கு வரவேண்டி விடுத்த சில அழைப்புகளுக்கு அரபிய பாஷையில் சுறுக்கமாக பதில் சொல்லிவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
வளைகுடா நாடுகளில் பல வருடங்கள் இருந்துவிட்டு ஓய்வுபெற்றவுடன் தாயகம் திரும்புவோர் எப்படி மீதி நாட்களை ஆரோக்யமாக கழிப்பது என்பதை பத்து நிமிடத்தில் அழகாக விளக்கிய ஶ்ரீனிவாசனிடம், நேற்றும் 'சொல்லுப்பா ஶ்ரீதர்... இப்பிடி கிட்டே வா.. உக்காரு' என்ற தனக்கே உரிய பாணி....
No comments:
Post a Comment