Friday, April 19, 2013
கணபதி அக்ரஹாரம்
பால்ய நண்பன் கணபதி நான் திருச்சி வந்தது தெரிந்து சென்னையில் இருந்து டெலிபோன் செய்து தஞ்சாவூர் வந்துவிடும்படி சொன்னான்.உடனே பஸ் பிடித்து தஞ்சாவூர் கிளம்பினேன்
தஞ்சையில் இருந்து 15 கி.மி. தொலைவில் திருவையாறுக்கு அருகில் 'கணபதி அக்ரஹாரம்' என்றொரு சிறிய கிராமம்.
செல்போன் அலறியது “ஸ்ரீதரா! எங்கடா இருக்கே? நா அரியலூர் கிட்ட வந்துட்டேன்.. குமரேசன் டாக்ஸி வெச்சுண்டு அங்க வெயிட் பண்றான்."கணபதிக்கு எல்லாமே அப்டு டேட்டா இருக்கனும்.
நான் தஞ்சாவூர் இறங்கி அய்யம்பேட்டை பஸ் பிடித்தேன். கூட்டம் குறைவு. 'ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊத கத்து அடிச்சிருச்சு' பாட்டு பஸ்ஸில் கேட்க இதமாக இருந்தது.( அவ்வளவு சவுண்டு தேவையா?) கண்டக்டர் கத்தியது யாருக்குமே கேட்கவில்லை "யாருக்காவது சில்ற பாக்கியா?" ம்ம்ஹும்..அநேகமாக எல்லோர் கையிலும் நோக்கியா.. கிராமத்து மக்கள் கைத்தொலைபேசியில் பேசும் அழகே தனி.. "அளகேசா! ஆபரேசன் முடுஞ்சுதா? மயக்கங்குடுத்து தானே செஞ்சாக?..போன்ல பணத்த ஏத்தல. பொறவு பேசறேன்.." கிரெடிட் இல்லாதலால் மிகச்சுருக்கமாக பேசிய பெருசு கையில் சிறிய கருப்பான அழகிய நோக்கியா..SMS, CAMERA,GALLERY என்று சகட்டுமேனிக்கு அவர் பார்த்துக்கொண்டிருந்தது, ஐபோன் வைத்திருக்கும் எனக்கு கூச்சமாக இருந்தது.
மெயின் ரோட்டில் இறங்கி மஹாகணபதி கோவிலை அடையும்போது நண்பன் கணபதி வந்து சேர்ந்திருந்தான். வீதிக்கு 50 வீடு வீதம் மொத்தம் 3 வீதி தான். சிவன் கோவில், பெருமாள் கோவில் மற்றும் மெயின் ரோட்டில் பெரிய மஹாகணபதி கோவில். திண்ணை, முத்தம், ரேழி, பட்டாசாலை, புழக்கடை சகிதத்துடன் நீண்ட வீடுகள். தினம் 8 மணி நேரம் மின் துண்டிப்பு இருப்பதற்கு அறிகுறியாய் பெருமாள் கோவிலில் இருந்து வருபவர்கள் எல்லோர் கையிலும் விசிறி..வெற்றுடம்பு.. ('உத்தமன் பேர்பாடி' ஜோக் நினைவுக்கு வந்தது). அது அவர்களது சொந்த ஊர். கணபதியின் அப்பா G.K. ராமமூர்த்தி அங்கே நிலங்கள் வைத்திருந்தார். தானமாகவோ அடிமாட்டு விலைக்கோ நிலத்தை அங்கிருப்பவற்கு கொடுத்து விட்டு வீட்டை மட்டும் வைத்துகொண்டார். பிறகு திருச்சி பொன்மலை ரயில்வேயில் உத்தியோகம் .. அவர் போன பின் கணபதிக்கு ஊரில் நல்ல மரியாதை. சில பேருக்கு பஹ்ரைனில் வேலை வாங்கி கொடுப்பதும், சிலருக்கு பண உதவி செய்வதும், குருக்கள் ஒருவரை காசி, கயா கூட்டிபோனதாலும், கோவிலுக்கு நிறைய நன்கொடை கொடுப்பதாலும், சென்ற வருடம் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தியதாலும், அவனுக்கு அங்கே ராஜ மரியாதை. போனதும் தொண்டைக்கு இதமாக பானாகமும், நீர் மோரும் கொடுத்தார்கள். பிறகு நேரே மகா கணபதிக்கு வெகு அருகே அமர்ந்து பூஜை, முதல் மரியாதை சகிதம் அர்ச்சனை முடிந்து வெளியே வந்தோம். குருக்கள் வீடு பெருமாள் கோவில் தாண்டி நடக்கும் தூரம் தான். இரண்டு பொட்டலங்களில் 'மொதக்' (எண்ணையில் பொரித்த தேங்கா கொழுக்கட்டை) கொடுத்தார்கள். வாசலில் பச்சை இளநீர் வெட்டி கொடுத்தார்கள். அங்கிருந்து நேராக சிவன் கோவில். குருக்களின் பையன் கார்த்திக் நம்மை வரவேற்று அர்ச்சனை செய்து தொன்னையில் சூடாக கோதுமை நெய் உப்புமா கொடுத்தார். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன் முன் கார் டிக்கியில் ஒரு மூட்டை நிறைய உரித்த தேங்காய், முருங்கைக்காய் வைக்கப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரம் காரில் பயணம். அம்பாசிடர் கார் மிகவும் வசதியானது. பின் பக்கம் சம்மணமிட்டு உட்கார வசதி, முதல் 15 நிமிடம் முன்சீட்டில் இருந்த குமரேசனுடன் ஸ்டாலின்-அழகிரி பிரச்னை, கலைஞர் குடும்ப அரசியல், 16 மணி நேர மின் வெட்டு... விவாதித்து விட்டு, கணபதியுடன், என் அம்மாவின் உடல் நிலை, கணபதியின் பஹ்ரைன் நண்பர்கள், அவன் மகன் விக்னேஷ் I .I .T. படிப்பு முடிந்து அமெரிக்கா செல்வது, நானும் கணபதியும் சேர்ந்து C .A படித்த நாட்கள், அதே போல் தற்போது சென்னையில் அவனது இளைய மகனுடன் சேர்ந்து C .A படிக்கும் எனது மூத்த மகன் என்று நிறைய பேசினோம். வெளியே திருவையாறு, உமையாள்புரம், பாபநாசம் என்று ஒவ்வொரு ஊரும் இருட்டில் தெரிந்தது. கும்பகோணம் தாண்டியதும் 'ராஜு.. டிகாஷன் போட்ரு' என்று கணபதி போனில் அக்காவிடம் தெரிவித்து 10 நிமிடத்தில் கோவிந்தபுரம் வந்து சேர மணி இரவு 10 தாண்டியது. கோசாலை வந்து சேர்ந்தோம். .. மிக பிரம்மாண்டமான (வட நாட்டு கோவிலை நினைவு படுத்தும்) கோவில் தாண்டி உள்ளே கணபதியின் அக்கா தங்கியிருக்கும் காட்டேஜ் வந்தோம். மும்பை முலுண்ட் பகுதியில் அவர்கள் குடியிருந்தபோதே பல முறை அவர்கள் வீடு போயிருக்கின்றேன். காட்டேஜின் எதிரே கொட்டகையில் 500கும் மேலான பசு மாடுகள். மதுராவில் இருந்து நிறைய பசு மாடுகள் வந்து சேர்ந்தனவாம். பராமரிக்க பண உதவி மிகவும் தேவைப்படுகிறதாம். எங்களை வரவேற்று 5 நிமிடம் பேசியவுடன் சுடச்சுட ரவா தோசை தேங்கா சட்னி..பிறகு சூப்பரான பில்டர் காபி…அந்நேரத்தில் பசிக்கு அமிர்தமாக இருந்தது. சரியாக 10.30 க்கு அங்கிருந்து கிளம்பினோம். நேரே கும்பகோணம் பஸ் நிலையம். கணபதியிடம் விடை பெற்றுக்கொண்டேன். "புள்ளையார வேண்டிக்கோடா... எல்லாம் சரியாப்போய்டும்.. வருஷப்பிறப்புக்கு நாம மீட் பண்ணுவோம்னு எதிர்பாகவே இல்ல.." கணபதியுடன் இருந்த அந்த 5 மணி நேரம் போதும்.. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருந்தது. கடந்த 33 வருட நட்பு, சேர்ந்து இருந்த 5 வருட பாம்பே வாழ்க்கை, தான் பஹ்ரைன் வந்து என்னையும் சேர்த்துகொண்டது, எங்களின்12 வருட பஹ்ரைன் நாட்கள்... பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த திருச்சி பஸ்ஸை நிறுத்தி ஏறி அமர்ந்தேன். கடந்த 15 நாட்களின் நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
82 வயதில் அம்மாவிற்கு திடீரென்று (35, 40 வயது பெண்களுக்கு வரும்) உடல் உபாதை, கர்ப்பப்பை கட்டி, oncology ரிப்போர்ட், புற்று நோய், histrectomy, இத்யாதி …. " இந்த வயசுக்கு சர்ஜரி ரொம்ப ரிஸ்க் தான் சார்.. ஆனா பாட்டி தைரியமா இருக்காங்க.. சான்சு எடுக்கலாம்.." என்று 10 நாட்கள் உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூக்கமில்லாமல் கூட இருந்து உதவிய என் அக்கா, அவளது கணவர் டாக்டர் மனோகர், கொஞ்சமும் பயமே இல்லாமல் சிரித்த முகத்துடனே மரணத்தை எட்டிப்பார்த்து மறுவாழ்வு பெற்ற என் அம்மா... கடந்த 15 நாட்கள் ATM,வங்கி, பார்மசி, ஆபரேசன் தியேட்டர், வார்டு, என்று ஒரு புது உலகத்தில் இருந்து விட்டு, 16 வது நாள் வருஷபபிறப்பன்று அன்று பால்ய நண்பனுடன் தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரம் மகா கணபதியை தரிசித்ததும் உடம்பிலும் மனத்திலும் ஒரு புதிய சக்தி கிடைத்த மாதிரி இருந்தது.
மணி காலை 1.15.. பஸ் திருச்சி ஜமால் முகமது கல்லூரி டோல்கேட் ஸ்டாப்பில் நின்றதும் இறங்கினேன். வெளியே தூறல் நின்றிருந்தது (உள்ளேயும் தான்)
நாளை மறுபடியும் பஹ்ரைன் சென்று 10 நாளில் திருச்சி வரவேண்டும்..அம்மாவிற்கு அடுத்து ரேடியேஷன் தெரபி செய்ய வேண்டுமாம்.. ,
Saturday, February 2, 2013
ஏம்ப்பா! நீதான் நல்லா படம் எடுப்பியே! சும்மா ஜாலியா தெனாலி, பஞ்சதந்திரம், மைகேல் மதனகாமராஜன்..ன்னுட்டு எல்லாரையும் காமெடியால சிரிக்க வெச்சுட்டு, நல்ல டூயட் சீன் காமிச்சிகிட்டு, உனக்கு புடிச்ச (மத்த ஹீரோவெல்லாம் தயங்குவாங்க) 'முத்த காட்சி அது இதுன்னு உன் ரசிகர்களுக்கு வேண்டியது நெறையா இருக்கேப்பா!
நீ நல்லவனாச்செப்பா! அத வுட்டுப்புட்டு என்னாத்துக்கு இந்த வம்புதும்புக்கு போறே?
ஜாதி, மதம் பத்தி நீ வாய தொரந்தாவே ஒன்னுகெடக்க ஒன்ன சொல்லி நல்லா வாங்கி கட்டியும் இன்னம் புத்தி வரலையா?
புதுசா ஊரவுட்டு வேற ஓடிப்போவேன்னு பூச்சி காட்டறே!
தம்பி வேணாம்ப்பா! மகாநதி மாதிரி மெசேஜ் சொல்லு போதும்... வயசு வேற ஏறிகிட்டே போகுது... முணுக்குன்னு கோபம் வேற வந்துருது..
உன்ன எல்லாரும் திட்டுனா மனசுக்கு கஷ்டமாக்கீதுபா..
அவனப்பாரு (ரஜினி).... அவனும் உன்னமாதிரி தான் ரசிகர்களுக்கு தேவையானமாதிரி படம் எடுத்து,சின்னபொண்னுங்களோட டான்ஸ் ஆடறான்..நல்ல மெசேஜ் சொல்லி காசும் பண்றான்.சும்மா அரசியல், இமயமல அது இதுன்னு சொல்லி அங்க இங்க போயி,கப்புன்னு கொயட்டாயி, தானுண்டு தன வேலையுண்டுன்னு இருக்கான்.
போரும்பா... எங்கயும் ஓடிப்போகாம உள்ளூர்லேயே இரு..மத்தவங்க மனசுக்கு புண்படற சீன எடுத்துட்டு, சாமி, சிலுவை,ஜாதி பத்தி வாய் தறக்காம ஒடம்ப பாத்துகிட்டு ஆஸ்கர் வாங்கற வேலையப்பாரு.... சும்மா வம்ப வெலைக்கி வாங்கிகிட்டு....திருந்துப்பா..
Thursday, January 31, 2013
சினிமா தியேட்டர்
எல்லா அம்மாக்களும் இப்படித்தான் சினிமாவுக்கு கூட்டிப்போகாமல் படுத்தியிருக்கிறார்களா......
பாதி நாட்கள் நானும் என் தம்பியும் தென்னூர் பாப்பு செட்டி தெருவில் ஆரம்பித்து அம்மா மற்றும் சித்தி பின்னாலேயே(சினிமாவுக்கு கூட்டிப்போக ) கெஞ்சிக்கொண்டே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு,அக்ரஹாரம், ஹிந்தி ப்ரசாரசபா,ரயில்வே கிராஸ் வழியாக போய் ராமகிருஷ்ணா தியேட்டர் அல்லது ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டர் போய் டிக்கெட் வாங்கி இரக்கமே இல்லாமல் எங்களை விட்டு விட்டு பல்லாண்டு வாழ்க,மீனவ நண்பன்,உழைக்கும் கரங்கள் போன்ற திராவ படங்களுக்கு அவர்கள் போனதும் நாங்கள் வந்த வழியே திரும்பும் போது கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திர்க்கு போவோம்.பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான்(வாயில் நுரை) இன்னொருவன் 'அய்யாமாருங்க..அப்பாமாருங்க...இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும (1 மணி நேரத்திற்கு மேல்) அவன் கீழே படுத்திருப்பவன் மேல் துணிகளை போட்டு மூடி கையை உயர்த்தினால் அந்த உடல் 3 அடிக்கு (மெய்யாலுமே) உயர்ந்ததை பார்த்து விட்டு தான் கிளம்புவோம்.(பாதியில் எழுந்து போனால் பேதியில் போகுமென்று வேறு பயமுறுத்தியிருக்கிறான்)
ஒருவழியாக இதெல்லாம் முடிந்து இருட்டும் நேரம் வீடு திரும்பினால் வாசலில் அம்மா(மீனவ நண்பன் முடிந்து). அப்புறமென்ன... 'பளார்' தான்
பாதி நாட்கள் நானும் என் தம்பியும் தென்னூர் பாப்பு செட்டி தெருவில் ஆரம்பித்து அம்மா மற்றும் சித்தி பின்னாலேயே(சினிமாவுக்கு கூட்டிப்போக ) கெஞ்சிக்கொண்டே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு,அக்ரஹாரம், ஹிந்தி ப்ரசாரசபா,ரயில்வே கிராஸ் வழியாக போய் ராமகிருஷ்ணா தியேட்டர் அல்லது ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டர் போய் டிக்கெட் வாங்கி இரக்கமே இல்லாமல் எங்களை விட்டு விட்டு பல்லாண்டு வாழ்க,மீனவ நண்பன்,உழைக்கும் கரங்கள் போன்ற திராவ படங்களுக்கு அவர்கள் போனதும் நாங்கள் வந்த வழியே திரும்பும் போது கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திர்க்கு போவோம்.பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான்(வாயில் நுரை) இன்னொருவன் 'அய்யாமாருங்க..அப்பாமாருங்க...இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும (1 மணி நேரத்திற்கு மேல்) அவன் கீழே படுத்திருப்பவன் மேல் துணிகளை போட்டு மூடி கையை உயர்த்தினால் அந்த உடல் 3 அடிக்கு (மெய்யாலுமே) உயர்ந்ததை பார்த்து விட்டு தான் கிளம்புவோம்.(பாதியில் எழுந்து போனால் பேதியில் போகுமென்று வேறு பயமுறுத்தியிருக்கிறான்)
ஒருவழியாக இதெல்லாம் முடிந்து இருட்டும் நேரம் வீடு திரும்பினால் வாசலில் அம்மா(மீனவ நண்பன் முடிந்து). அப்புறமென்ன... 'பளார்' தான்
தியேட்டரில் படம் பார்க்கும் போதே என்ன பதார்த்தங்கள் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்ததுண்டு. அதாவது கடலை மிட்டாய் SAFE என்று அவர்கள் நினைக்க, நாங்கள் பீடா (கலர் தேங்காய் தூள் தூவியது) வாங்கினால், 'காசுனி வேஸ்ட் சேஸ்திவேரா ' என்று சொல்லி நடு தொடையில் கன்னிப்போகும் அளவிற்கு ஒரு non stop
கிள்ளு. அதை நிறுத்த ஒரே வழி எனக்கும் என் தம்பிக்கும் தெரியும். அந்த பட இண்டர்வல்லில் (வலி இல்லையென்றாலும்) 'லேது..லேது .. ஒத்து...' என்று காட்டுக்கத்தல் போடுவோம்.எல்லோரும் பார்க்கிறார்கள் என்று வெட்கப்பட்டு அம்மா (நுவ்வு இன்டிக்கி ரா.. என்று சன்னமாக மிரட்டி) விட்டுவிடுவார்கள்.
முக்கோண காய்கறி சமோசா, 8 track முறுக்கு,முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்),டிர்ரிங்க் என்று சாவியால் ஒலிஎழுப்பியபடி காளி மார்க் கலர் , இதெல்லாமல் சாப்பிடாமல் தமிழ் படமா?( அப்போது எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செய்தால் என்ன,செய்யாட்டி என்ன
முக்கோண காய்கறி சமோசா, 8 track முறுக்கு,முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்),டிர்ரிங்க் என்று சாவியால் ஒலிஎழுப்பியபடி காளி மார்க் கலர் , இதெல்லாமல் சாப்பிடாமல் தமிழ் படமா?( அப்போது எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செய்தால் என்ன,செய்யாட்டி என்ன
Subscribe to:
Posts (Atom)