சொற்ப இலக்கத்தில் முகநூல் நண்பர்கள் என 2012 இல் உள்ளே நுழைந்தேன். இன்னும் வெளிவர இயலவில்லை. ஆரம்பத்தில் மாதமொருமுறையென இடும் ஏதாவது ஒரு மொக்கை பதிவிற்கு பத்து லைக் வந்தாலே புளகாங்கிதமடைந்த மனது, தற்போது தினமும் எதையாவது பதியச்சொல்கிறது.
முகநூல் என ஒன்று இல்லாதிருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை. மனைவி குழந்தைகளிடம் அதிக நேரம் செலவளித்திருக்கலாமோ! கிடையாது. மனைவியுடன் அவளுக்கு பிடித்த குறும்படங்கள், நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பதும், பஹ்ரைனில் புதிதாக கட்டமைக்கப்பட்ட (man-made) கடற்கரை ஓரங்களையும், கடலை சீர்பாடு செய்து, பாறைகளால் நிரப்பி, அதன்மேல் உருவாக்கப்பட்ட புதிய நகரங்களையும், பூங்காக்களையும் லாங் ட்ரைவ் எனப்படும் இலக்கின்றி சுற்றுதலும் உண்டு என்றாலும் அப்போதும் நேரம் கிடைக்கும்போது கடற்கரையிலும், பூங்காக்களிலும் முகநூலை திறவாத நாட்கள் இல்லை.
இந்த 10 வருடத்தில் பொக்கிஷமென கருதும் ஏராளமான நண்பர்கள்…
ஒத்த கருத்துள்ள நண்பர்கள்..
ஒரே அதிர்வலை கொண்ட நண்பர்கள்..
மலைக்க வைக்கும் திறமை கொண்ட நண்பர்கள்…
பதிவுகளையும் கருத்துக்களையும் படித்த மாத்திரத்தில் குணநலன்களை அறிய முடியும் நண்பர்கள்…
தாராள மற்றும் தளரா மனம் கொண்ட நண்பர்கள்..
இறை நம்பிக்கை அதிகம் உள்ள நண்பர்கள்..
நிறுத்தி நிதானமாக யோசித்து அடக்கமாக பதில் சொல்லும் நண்பர்கள்…
அரசியல் நிலவரத்தை தினமும் அறியத்தரும் நண்பர்கள்..
இந்திய ராணுவம், படை வீரர்கள் குறித்த அரிய தகவல்கள் அளிக்கும் நண்பர்கள்..
பழம்பெரும் எழுத்தாளர்கள் இல்லாத குறையை தீர்த்து வைக்க, அற்புதமான கதைகள் எழுதும் நண்பர்கள்..
தீர்த்த யாத்திரை எழுதும் நண்பர்கள்..
சினிமா, திரையிசை பற்றிய அற்புதமான கருத்துக்கள் எழுதும் நண்பர்கள்..
தமிழ் இலக்கியம் குறித்து எழுதும் நண்பர்கள்..
தினமும் கொட்டேஷன் போட்டு வாழ்த்தும் நண்பர்கள்..
ஹை ப்ரொஃபைல் ஆனால் படாடோபமில்லாத அடக்கமான நண்பர்கள்..
இளம் (திரைப்பட) இயக்குநர் நண்பர்கள்..
எழுத்தாளர் நண்பர்கள்..
திரை பிரபலங்களின் வாரிசு நண்பர்கள்..
எழுத்தாளர் வாரிசு நண்பர்கள்..
ஏராளமான திருச்சிவாசி நண்பர்கள்..
கார்ப்பரேட் உலகம் குறித்து சுவாரசியமாக எழுதும் நண்பர்கள்..
திரை விமரிசனம் எழுதும் நண்பர்கள்..
ஓவியர் நண்பர்கள்..
ஏராளமான பட்டய கணக்காளர்(CA), மருத்துவர் (doctor), தகவல் தொழில்நுட்பம் (IT) நண்பர்கள்..
பொறியியல் நண்பர்கள்..
பொரியலியல் (cooking) நண்பர்கள்..
அரசாங்க உத்தியோகஸ்தர் மற்றும் ஓய்வு பெற்ற சீனியர் நண்பர்கள்..
இன்டெலக்சுவல் நண்பர்கள்..
அவசர குடுக்கை நண்பர்கள்..
ஏட்டிக்கி போட்டி வியாக்யானம் செய்யும் நண்பர்கள்…
சட்டென கோபம் தெறிக்கும் நண்பர்கள்…
எல்லா கருத்துக்கும் எதிர்மறை தெரிவிக்கும் நண்பர்கள்…
முகநூலலேயே சண்டை போடும் நண்பர்கள்…
இர்ரிடேட்டங் நண்பர்கள்..
நட்பு அழைப்பு ஏற்றவுடனேயே இன்பக்ஸ் வந்து கரிகுலம் விட்டே அனுப்பும் நண்பர்கள்…
’யான் பெற்ற இன்பம்’ கணக்காக ஏதோ ஒரு யூட்யூப் லிங்க்கை உள்டப்பிக்கு அனுப்பும் கொலவெறி நண்பர்கள்…
நாம் ஒரு பதிவிட்டால் அதற்கு சம்மந்தமில்லாத கருத்து ஒன்றை இட்டு மக்களை டைவர்ட் செய்யும் நண்பர்கள்..
‘அவசரமா வெளியூர் வந்து, பர்ஸை தொலைச்சிட்டேன். ஒரு 5000 ரூபாய் அனுப்ப முடியுமா?’ என கேட்கும் முகமறியா ஃபேக் ஐடி நண்பர்கள்..
‘பூனம் பஜ்வா’ வின் படத்துடன் ப்ரொஃபைலை லாக் செய்து ஆண்டிபட்டியிலிருந்து நட்பு அழைப்பு விடும் ஆண்ட்டி நண்பிகள்..
வெறும் ‘Hi’ மட்டும் மெசஞ்சரில் அனுப்பும் வினோத நண்பர்கள்..
நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்.
43 வருடங்களில் மொத்தம் 50க்கும் குறைவான ஓவியங்கள் வரைந்திருந்த நான் முகநூல் வந்தபின் அடுத்த 18 வருடங்களில் வரைந்தது சுமார் 700க்கும் மேல். எழுதிய கட்டுரைகள் 200க்கும் மேல்.
முகநூல் மூலம் ஏராளமான உதவிகள் பெற்றதுடன் கற்றுக்கொண்டவை பல.
அனைத்து முகநூல் நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
No comments:
Post a Comment