Friday, June 20, 2025

QFR- சுந்தரேசன்

 ட்யூங்… பப்பப்ப பாம்… ட்யூங்.. பப்பப்ப பாம்..

கீர்த்தனாவின் ட்ரம்பெட் இசையுடன் ட்யூங்.. என கிடாரில் வினோதமாக இசைத்து பாடலின் ஆரம்பத்துக்கு அருமையாக என்ட்ரி கொடுப்பார் இவர். அந்த பாடல் ‘ஜெர்மணியின் செந்தேன் மலரே’ (QFR-261).
நெற்றியில் அழகான குங்குமக்கீற்று.. வாய் நிறைய புன்னகை.. சால்ட் அன் பெப்பர் கேசம்+குறுந்தாடி. இவர் தான் சுந்தரேசன் சார்.
சூப்பர் சிங்கர் போன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளில் SPB போன்ற ஜாம்பவான்கள் ‘இளைய நிலா பொழிகிறதே’ போன்ற பாடல்கள் பாடினால் மேடையில் நீங்கள் இவரை கிடாருடன் பார்க்கலாம். தமிழ் உலகமே இவரது திறமையை கண்டு வியந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாது மிக அடக்கமாக இருப்பவர்.
Subhasree Thanikachalam அவர்களின் QFR நிகழ்ச்சியில் மணி, லச்சுக்குட்டி, கார்த்திக்குடன் கிடார் பாடல்கள் எல்லாவற்றிலும் இவர் வாசிக்கிறார். கிடாரை ஒரு குழந்தை போல பாவித்து அழகாக வாசிக்கிறார். கூடவே மாண்டலினும் வாசிக்கிறார்.
QFR-207ஆன ‘பூந்தளிர் ஆட’ பாடல் ஆரம்ப இசையை வெங்கட்டின் ரிதம் பேட் மற்றும் கோபால் ராவ் வின் கீபோர்ட் உடன் இவர் இசைக்கும் கிடார் இசை அபாரம்.
எலெக்ட்ரிக் கிடார் இடையிசைக்கென புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான ‘பாட்டு வரும்.. உன்னைப்பார்த்துக்கொண்டிருந்தால்’ (QFR-337) பாடலில் இவரது கிடார் இசை அற்புதம்.
மற்றொரு பாடலான ‘தொட்டால் பூ மலரும்’ (QFR- 319) கிடாருக்கான பாடல். கார்த்திக்குடன் சேர்ந்து கலக்குவார்.
பாடல் முழுக்க பின்புலத்தில் கிடார் இசை ஒலிக்கும் ‘ஹே.. பாடல் ஒன்று’ (QFR- 179). அபாரமாக வாசித்திருப்பார்.
‘அந்தி வரும் நேரம்’ (QFR-338) பல்லவி, அனுபல்லவி இத்யாதி முடிந்து துவங்கும் இன்டர்ல்யூடில் எலெக்ட்ரிக் கிடார் இசை அசாத்தியமாக வாசிப்பார்.
எனக்கு இவர் வாசிப்பில் மிகவும் பிடித்த பாடல் ‘புதிய பூவிது’ (QFR-380). மாண்டலினால் ஆரம்ப இசை மற்றும் இடையிசையை பிச்சி உதறுவார். Ofcourse ஒரு பெரிய இசைக்கலைஞர் குழுவே இவருடன் வாசித்து அந்த பாடல் QFRஇன் மிகச்சிறந்த பாடல் வரிசையில் உள்ளது.
மற்றொரு அட்டகாசமான பாடல் QFR-394 ‘அன்று வந்தது அதே நிலா’. ஷ்யாமுடன் சேர்ந்து கிடார் இசையில் அதகளப்படுத்தியிருப்பார்.
ஒரே பாடலில் கிடார் மற்றும் மாண்டலின் இரண்டையும் வாசித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்.. ஆம்! ‘எங்கே நிம்மதி’ (QFR-320) பாடலின் இரண்டு இடையிசையிலும்..
குறிப்பிடுவதற்கு இன்னும் ஏராளமான பாடல்கள்..
QFR-315 ‘முதன் முதலாக காதல் டூயட்’
QFR-317 ‘நினைவோ ஒரு பறவை’
QFR-345 ‘எங்கும் நிறைந்த’
QFR-324 ‘காதல் ராஜ்ஜியம் எனது’
கடந்த 5 நாட்களாக நாம் பார்த்து வரும் டாப்-50 பாடல்களில் பெரும்பாலான பாடல்களில் கிடார் இசைக்கிறார். இன்று கூட 41-50 இல் இவருக்கு மூன்று பாடல்கள்.

No comments:

Post a Comment