சினிமா நடிகர் ARS அவர்களது மகன். சுமார் 15 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் பால்ய நண்பன் Ganapathi Subramanian மூலம் எனக்கு அறிமுகமான CA இவர்.
நம்மிடமெல்லாம் பேசுவாரா என தயங்கி நின்ற என்னிடம் மிக சகஜமாக பேச ஆரம்பித்தவர். செம்ம அரட்டை பேர்வழி. படு சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர்.
கணபதி வீட்டில் நண்பர்கள் குடும்பத்துடன் சந்திக்கும்போது இவரும் மற்றொரு நண்பர் கோபியும் சேர்ந்து சிறு நகைச்சுவை நாடகம் போடுவார்கள். தேங்காய் ஶ்ரீனிவாசன் போன்ற நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்து எல்லோரையும் அசத்துவார்.
பஹ்ரைனில் பெரிய நிறுவனமொன்றில் Head of Finance ஆக இருந்தவர். சாய் பஜன்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொள்பவர். வேறு பணி கிடைத்து பஹ்ரைனை விட்டு இவர் கிளம்பிப்போகவும் எங்களது தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டாலும், சில வருடங்களுக்கு முன் கத்தார் நாட்டிலிருக்கும் இவருடன் முகநூல் மூலம் மீண்டும் தொடர்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக்கு.
Desi Army என்ற பெயரில் நண்பர்கள் புடைசூழ மற்ற நாடுகளுக்கு சென்று வண்ண உடைகள் மற்றும் டர்பன்களுடன் கிரிக்கெட் மாட்ச் பார்ப்பது, நல்ல சினிமாப்படங்கள் பார்ப்பது , வார இறுதிகளில் கிரிக்கெட், கால்ஃப் விளையாடுவது, நீச்சல் குளத்தில் கொட்டமடிப்பது..நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள் தான் இவரது உலகம்.
ஜெய் சினிமா பேரவை என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதி அவ்வப்போது அசத்துபவர்..
இறைவன் அளித்த இந்த வாழ்க்கையை இனிமையான பொழுதுகளுடன் நண்பர்களுடன் மகிழ்ந்து கொண்டாடி, நற்பணிகள் செய்தும், நமது சனாதன தர்மங்கள் மற்றும் பூஜை புணஸ்காரங்களை மறவாமல் அனுஷ்டித்து, நமது பண்டிகைகள் அனைத்தையுமே பாரம்பரியத்துடன் கொண்டாடி, தமிழர் பெருமையை கத்தாரில் நிலைநாட்டும் நண்பர் Jaishankar Srinivasanஐ அவரது பிறந்தநாளான இன்று பென்சிலில் வரைந்த அவரது உருவப்பட ஓவியத்துடன் வாழ்த்தும்..
சீதாபதி ஶ்ரீதர்
No comments:
Post a Comment