பஹ்ரைனிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரம் நான்கு மணி நேரம், பின் அங்கிருந்து நான்கு மணி நேர பயணத்திற்குப்பின் மதியம் 12 மணிக்கு ஹெல்சிங்க்கி விமானத்தை விட்டு இறங்கும் போது வெயிலில்லா இதமான குளிர். கடவுச்சீட்டு கட்டுப்பாடு சம்பிரதாயங்கள் முடிந்து சாமான்களை எடுக்கும் பகுதி வந்து, டெலிநோர் எனும் உள்ளூர் சிம் கார்டு சுமார் முப்பது யூரோக்களுக்கு வாங்கினோம். அட்ரஸ் ப்ரூஃப், அப்ளிகேஷன் என எதுவும் தேவையில்லாமல் ஏர்போர்ட் சூப்பர் மார்க்கெட்டில் சூயிங்கம் போல டெலிபோன் சிப்புகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்.
கார்டு போட்ட அடுத்த நொடி ‘ஶ்ரீனி! நீ எங்க இருக்கே? பெட்டி கெடைச்சுதா? நா உன்னை பாத்துட்டேன். அப்படியே இடது பக்கம் திரும்பு. Fat burger கடையான்ட நிக்கிறேன் பார்.. ’ என காட்டுக்கத்தலுடன் போனில் பேசி ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தோம். நாங்கள் 22 பேர். பஹ்ரைன் சி.ஏ. சாப்டர் அங்கத்தினர்கள். வருடமொரு முறை இதுபோல உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து செல்லும் உல்லாச பயணம் உண்டு.
‘பஹ்ரைன் சீ.ஏ. சாப்டர்’ பதாகையுடன் எங்களுக்காக காத்திருந்த மங்களூர் காரர் டூர் மானேஜர் சில்வெஸ்டர் எங்களை ஸ்கானியா பஸ்ஸில் ஏற்றினார். பஸ் ஓட்டுனர் எம்ஜியார் போல ரோஸ் கலர். ஃபின்லாந்தில் ஓட்டுனர்களுக்கு அதிக சம்பளமாம். அவரை காப்டன் எனத்தான் அழைக்க வேண்டுமாம். டூர் மானேஜரை விட அதிக அதிகாரம் காப்டனுக்குத்தானாம். டூர் போக தயார் செய்த பயணத்திட்டம் அவர் கையில். அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாதாம். பஸ் கிளம்பும் முன் கண்ணாடியில் எங்களை பார்க்கிறார். எல்லோரும் இருக்கையில் அமரும் வரை பஸ்ஸை கிளப்ப மாட்டாராம். ஓடும் பஸ்ஸில் நாம் நின்றுகொண்டிருந்தால் சடாரென ஓரம் கட்டி நிற்கிறார். தலையை திருப்பி சுத்தமான இங்கிலாந்து ஆங்கிலத்தில் 500 யூரோக்கள் (அதாவது ரூ43,000-மூன்று பூஜ்ஜியம் ) அபராதம்.. ஜாக்கிரதை! என மிரட்டுகிறார்.
வெளியே வோக்ஸ்வாகன், ஔடி, ஓப்பல் ஆஸ்ட்ரா, பென்ஸ் கார்கள். ஏராளமான சைக்கிள்கள். நகரமே சோம்பல் முறித்து இயங்கிக்கொண்டிருக்க, சாலைகளில் போக்குவரத்து அதிகம் இல்லை. அடுத்து ஒரு இந்தியன் உணவகத்தில் மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார்கள். அருமையான வட இந்திய உணவுடன் மாம்பழ லஸ்ஸி பருகி ஓஹோஹோ என சத்தம் போட்டு சிரித்து, தோளில் அடித்து, இரண்டு மணிக்கு கிளம்ப வேண்டும் என்ற டூர் மானேஜரை இரண்டே முக்கால் வரை இழுத்தடித்து கிளம்பும்போது ‘மசாலா சாய் கிடைக்குமா?’ என கேட்டு அவர் இரத்த அழுத்தத்தை 130க்கு மேல் கூட்டி பஸ் ஏறும்போது நமது கைடு ஓருவர் எங்களை வரவேற்றார்.
‘என் பெயர் கார்னேலியா. நான் உங்கள் கைடு’ என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த பெண்மணியை சற்று தள்ளி நின்று அசால்ட்டாக பார்த்தால் 35 வயது. கிட்டப்போய் உற்று பார்த்தால் 45 வயது. அவர் தலை முடி, முக சுறுக்கங்கள், மஞ்சள் பல், அவரது குடும்பம் என கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் அவருக்கு 55 வயது எனத்தெரியும்.
ஃபின்லாந்து நாட்டின் பெருமைகளை சற்று ஆனவத்துடன் விளக்கினார். சீரியசாக வேறு இருந்தார். இது நமக்கு சரிப்பட்டு வராது என அவரையே கலாய்க்க ஆரம்பித்தோம். மெல்ல ‘இந்த ஊர் பெண்கள் எப்பிடி? காதல் கல்யாணங்கள் உண்டா?’ போன்ற சில கேள்விகளை அவர் முன் போட்டு அவர் முகத்தை பிரகாசமாக்கினோம். அம்மனி குஷியாகி எங்களுடன் அரட்டையே அடிக்க ஆரம்பித்து விட்டார்.
உலகிலேயே சுத்தமான காற்றுள்ள நாடாம். 70 சதம் காடுகளாம். மக்கள் தொகை சுமார் 5 மில்லியன் தானாம். அதை இன்னும் பெருக்க அரசாங்கம் முயல்கிறதாம். ஆண்களின் சராசரி வயது 74 மற்றும் பெண்களின் சராசரி வயது 84ஆம். எப்படிய்யா மக்கள் தொகை பெருகும் 😃! ஒரு குடும்பத்தில் சராசரியாக 1.7 குழந்தைகள் தானாம். அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் பாடுபடுகிறதாம் (அரசாங்கம் பாடு பட்டா போதுமா!). சாயங்காலம் அஞ்சாறு மணிக்கெல்லாம் கடைகளை அடைத்து, சீக்கிரம் சாப்ட்டு சிவப்பு ஒயின் குடித்து சட்டுன்னு தூங்கி விடுவார்களாம். சுத்தம்! சமீபத்தில் ஜனாதிபதியே குழந்தை பெற்றுக்கொண்டாராம். ஒரு நாளைக்கு இத்தினி *த்துணி (டயாபர்) மாத்தினார் என பத்திரிகைகள் பெருமையாக எழுதுகிறார்கள். ஆக எதிர் காலத்திற்கு இளைஞர்கள் தேவை என்ற கவலையாம் அவர்களுக்கு.
சொகுசு பேருந்தில் நகரை சுற்றிக்காட்டியபடியே நிறைய சுவாரசியமான தகவல்களை கொடுத்துக்கொண்டிருந்தார் நம் கைடு.
நடுவே அவரிடம் ‘அது சரி கரோலினா!’ என ஆரம்பித்த என்னை தடுத்து ‘என் பெயர் கார்னேலியா! கரோலினா அல்ல. எங்கள் பெயரை மாற்றி கூப்பிட வேண்டாம் புரிந்ததா?’ என வெடுக்கென கேட்டார். அங்கங்கே வண்டியை நிறுத்தி தேவாலயங்களையும் அருங்காட்சியக்கங்களையும் காட்டினார். வழி நெடுக புராதன கட்டிடங்கள் பார்க்க பிரமிப்பாக இருந்தன.
நடுவே அவரிடம் ‘அது சரி கரோலினா!’ என ஆரம்பித்த என்னை தடுத்து ‘என் பெயர் கார்னேலியா! கரோலினா அல்ல. எங்கள் பெயரை மாற்றி கூப்பிட வேண்டாம் புரிந்ததா?’ என வெடுக்கென கேட்டார். அங்கங்கே வண்டியை நிறுத்தி தேவாலயங்களையும் அருங்காட்சியக்கங்களையும் காட்டினார். வழி நெடுக புராதன கட்டிடங்கள் பார்க்க பிரமிப்பாக இருந்தன.
பெரிய தேவாலயம் ஒன்றில் நுழைந்தோம். உள்ளே ஜெபம் செய்ய நீண்ட பெஞ்சுகள். ஓரத்தில் ஞான ஒளி சிவாஜி மாதிரி ஒருத்தர் மீசையுடன் பியானோ வாசிக்க, பக்கத்தில் இரண்டு பெண்கள் வயலின். மைக், ஸ்பீக்கர் என எதுவும் இல்லாமல் அந்த அரங்கமே மிதமான ஒலியில் மிதக்க காதுகளுக்கு மிக இனிமையான இசை. ‘தலையை அப்பிடியே தூக்கி உட்கூரையை பாருங்க!’ என கார்னேலியா சொல்ல அன்னாந்து பார்த்தால் கூரை முழுவதும் செம்பாலான கம்பிகளை வரிவரியாக பொருத்தியிருந்தார்கள். அதனால் ஸ்பீக்கர் இல்லாமலேயே அரங்கம் முழுவதும் ஒலி. கம்பிகள் முழுவதும் சேர்த்தால் மொத்தம் 22 கி.மீ. நீளமாம். அசந்து போனோம். வட்டமாக நின்று கூரையுடன் படம் எடுத்துக்கொண்டோம். (படம் பார்க்க!)
வெளியே வந்து பஸ்ஸில் அமர்ந்தவுடன் கார்னேலியா தொடர்ந்தார். பெண்களுக்கு பிரசவ விடுப்பு சம்பளத்துடன் 9 மாதங்களாம். அப்பாடி! பிரசவம் முடிந்து குழந்தை பராமரிக்கவும் அரசாங்கம் பணம் கொடுக்கிறதாம். குழந்தையை பேபி சிட்டிங்கில் விட்டால் செலவு அரசாங்கத்தினுடையதாம். ‘வேணாங்க! நா வீட்லயே குழந்தையை பாத்துக்கறேனே!’ என்றாலும் ‘இந்தா அதற்கும் அலவன்ஸ்’ என பணம் கொடுப்பார்களாம். அதுவும் குழந்தையின் 17 வயது வரை.
52 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார். ‘ஏன்.. என்னா பிரச்னை இங்க?’ எனக்கேட்டோம். ‘ பொதுவாக இங்கே பெண்கள் ஆண்களை நம்பி இல்லை. தாங்களாகவே சம்பாதிக்க வேண்டும்.. சுதந்திரமாகவும் திடமாகவும் முடிவு எடுப்பது.. ஆண்களின் அடக்குமுறையை எதிர்ப்பது, ( அதனால் தான் நிறைய ஆண்கள் பஸ் ஒட்டிக்கொண்டு தாமதமாக வீட்டிற்கு போகிறார்களா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டோம்.. வம்பு!) இதனால் தான் பாதி திருமணங்கள் முறிந்து விடுகின்றன’ என விளக்கினார்.
‘அப்ப குழந்தைகள்’
‘ அதுங்களை இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் பார்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் அதற்கென காப்பகங்கள் உண்டு. அதற்கான மாதாந்திர தொகை ஆளுக்கு பாதி’
ஏதோ ஒரு பூங்கா சென்றோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
உலகிலேயே தரமான கல்வி ஃபின்லாந்தில் தானாம். வீட்டுப்பாடம் (ஹோம் வொர்க்) கிடையாதாம். குழந்தைகளின் மூளை பஞ்சு போல. அதை பத்திரமாக கையாள வேண்டும். கணிதப்பாடம் நிறைய உண்டாம் மூளை வளர்ச்சிக்கு. பாடத்திட்டத்தில் இசை அதிகமாம். 18இலிருந்து 28 வயதிற்குள் 6 மாதம் கட்டாய ராணுவ சேவை உண்டாம். சிறந்த மாணவர்களுக்கு இன்னும் ஒரு வருட ராணுவ சேவையை அதிகரித்தால் ஸ்வீட் எடுத்து கொண்டாடுகிறார்கள்.
கப்பல் கட்டுமான தொழிலில் சிறந்த நாடுகளில் ஒன்றாம். அதிலும் மலை போன்ற பனிக்கட்டிகளை உடைக்கும் ( ice breaker ships) கப்பல்கள் இங்கு பிரசித்தி பெற்றவையாம். 5 மீட்டர் தடிமனான பனிக்கட்டியை வடாம் போல நொறுக்கிச்செல்லுமாம். சொகுசு கப்பல்கள் (cruise) செய்து ஏராளமான ஏற்றுமதியாம்.
சுமார் 80 சதவீத மக்கள் லுத்ரன் என்ற வகையைச்சேர்ந்த கிருத்தவர்கள், 2% பிராடஸ்மென்ட் மற்றும் 1%க்கும் குறைவாக கத்தோலிக்கர்கள், மீதம் மற்ற மதத்தினராம்.
சுமார் 80 சதவீத மக்கள் லுத்ரன் என்ற வகையைச்சேர்ந்த கிருத்தவர்கள், 2% பிராடஸ்மென்ட் மற்றும் 1%க்கும் குறைவாக கத்தோலிக்கர்கள், மீதம் மற்ற மதத்தினராம்.
ஃபின்லாந்தில் நாங்கள் இருந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் மட்டுமே எங்களுடன் இருந்த கார்னேலியா ஊரை சுற்றிக்காட்டி நடுநடுவே பகிர்ந்து கொண்ட தகவல்கள் மேற்சொன்னவை.
ரொம்ப கண்டிப்பானவர் போலும். கணவர் எப்பிடி சமாளிக்கிறார் என தெரிந்து கொள்ள ஆவல் எனக்கு. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘சார் என்ன செய்யறார்’ எனக்கேட்டேன்.
‘பாலெரினாவுக்கும் ஓப்ராவுக்கும் வித்தியாசம் தெரியலை அவனுக்கு.’
‘சரிங்க. அது அவ்ளோ முக்கியமா? குழந்தைகளை பெருக்கனும்னு அரசாங்கம் சொல்லுது. நீங்க என்னமோ பாலெரினா, ஓப்ரானுகிட்டு!’ என கேட்க நினைத்து வாயை திறக்க எத்தனிக்கும்போது, மனைவி உஷா Usharani Sridhar என்னை தடுத்து ‘நூவ்வு கம்மட்ட உண்டு!’ என அதட்டினார் ( இந்தியா ஒன்னும் ஃபின்லாந்துக்கு குறைச்சல் இல்லை😃)
‘பாலெரினா ஒரு வகை நடனம். ஓப்ரா என்பது நடனத்துடன் பாடல் மற்றும் நாடகம் கூடியது. இது கூடவா தெரியலை அவனுக்கு.. சோம்பேறி ஓநாய்!’ (எங்களுக்கே இப்பத்தாங்க தெரிஞ்சது!)
‘இருக்கட்டும்ங்க.. சரி! அவரு என்ன பண்றாரு இப்ப ?’
‘யாருக்கு தெரியும்? நமக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியா இருக்கனும்னு எனக்கு ஆசை. ஆனா அது நடக்காது போலன்னு சொல்லி..’
‘சொல்லி?’
No comments:
Post a Comment