80களில் CA ஆர்டிகிள்ஸ் செய்துகொண்டருந்த சமயம்.. ஆடிட்டரின் பார்ட்னரான திருச்சி செல்வம் ஹோட்டல் அதிபர் மற்றும் ஆடிட்டர் முத்துகிருஷ்ணனிடம் CA படித்துக்கொண்டிருந்தவன் இவன். வெளியூர் பாங்க் ஆடிட்களுக்கு சேர்ந்து போவோம். பாலக்கரை பிரபாத் தியேட்டர் சமீபம் தான் ஆபிஸ். சட்டென ஏதோ ஒரு ஈர்ப்பு. நல்ல நண்பர்களானோம்.
ரோட்டில் நடந்துபோகும்போது பெண்களே இவனை சைட் அடிக்கும் அளவிற்கு சுந்தரன். நல்ல உயரம், ஒருதலை ராகம் ரவீந்தர் மாதிரி சுருட்டை முடி, லதா தம்பி ராஜ்குமார் மாதிரி கண்கள், முதுகில் டக்கு பிடித்த சட்டையை சிங்காரதோப்பு ஜோதிஸ் டெய்லரிடமே தைப்பான். மலைவாசல் அருகே மார்கரெட் சலூனில் சவரம் மற்றும் ரோலிங் கோம்பில் சிகையலங்காரம், உடலை ஒட்டிய ஸ்கின் ஃபிட் பாண்ட்டை நடுவயிற்றுக்கும் சற்று மேல் வரை போட்டு, முழுக்கை சட்டையை இன்செய்து, ஜிப்பை திறந்து கை விட்டு சட்டையை இன்னும் கீழே இழுத்து விட்டுக்கொண்டு, பாட்டா மொக்காசினோ ஸ்லிப்ஆன் ஷூவுடன் வாழ்வே மாயம் (முதற்பகுதி) கமல் போல சோஃபீஸ் கார்னர் பக்கம் நடந்தால் பஸ்ஸுக்கு காத்திருக்கும் ஹோலிக்ராஸ் பெண்கள் கண்ணை கசக்கும் சாக்கில் இவனை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அதை நீ பாத்தியா என கேட்பவர்களுக்கு..! பொறாமையுடன் கூட நடந்தவன் நானாயிற்றே! நேஷனல் காலேஜ் மியூசிக் டீமில் காங்கோ ட்ரம்ஸ் வாசிப்பவன்.
மேலபுலிவார்ட்ரோடு ஆதிகுடி காபி க்ளப் தாண்டி ஜாஃபர்ஷா தெருவில் நுழைந்து வைரக்கற்கள் விற்கும் சேட்டு கடைகளை கடந்து குறுக்கே சடாரென ஓரிரு சந்துகளில் திரும்பினால் இவனது வீடு. அப்பா கஸ்டம்ஸ் சூப்பரின்டென்டன்ட். துல்லியமாக மீசையை ட்ரிம் செய்து யூனிஃபார்முடன் ஜீப்பில் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார். மற்ற நேரங்களில் முன்டா பனியன் கட்டம் போட்ட கைலியுடன் அதிகம் பேசாமல் சோபாவில் சரிந்திருப்பார். CA படிக்கும் பையனிடம் ரொம்ப மரியாதை, செலவுக்கு கேட்கும்போதெல்லாம் பணம் தாராளமாக கொடுப்பார்.
இவனது வீட்டு மொட்டை மாடி கீத்துக்கொட்டகையில் கயிற்றுக்கட்டில் முழுக்க கனமான புத்தகங்கள் பரத்தி நாங்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து படிப்போம். 'ஆமா..நீ இது வரைக்கும் எத்தினி பேத்தோட கம்பைன்ட் ஸ்டடீஸ் போட்ருக்க?' என நண்பர் Balasubramanian AKஒரு முறை என்னை கேட்டது நினைவுக்கு வருகிறது. மொட்டை மாடியில் படிப்பா! பாதி நேரம் பேச்சு தான். 'டேய் என்னோட பேண்ட் ஒன்னு டைட் ஆயிடுச்சு உனக்கு சரியா இருக்குமா' என இவன் கேட்டது தான் தாமதம், அர்த்த ராத்திரியில் உடனே ட்ரையல் பார்ப்போம்.
தினமும் நண்பர்கள் சந்திப்பு, சினிமா, கோவில் என சேர்ந்து சுற்றுவோம். காக்கிசட்டை, முதல் மரியாதை, நெற்றிக்கண் , நீங்கள் கேட்டவை போன்ற படங்கள் வந்திருந்த சமயம். சட்டென முடிவெடுத்து மாரிஸ் மைனர், சிப்பி, காவேரி தியேட்டர்களுக்கு படையெடுத்து ஓடுவோம். தடுக்கி விழுந்தால் ஹோட்டலில் ட்ரீட். சேர்ந்து ஃபெயில் ஆனாலும் சீ.ஏ பரிட்சை ரிசல்ட் அன்று நண்பர்கள் கூடி அடுத்த அட்டெம்ப்ட் எப்படி படிக்க ஆரம்பிப்பது என முடிவு செய்து அதற்கும் ஹோட்டலில் ட்ரீட். CA எக்ஸாம் அப்ளிகேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்ய எல்லோரும் கூடி அதற்கும் ட்ரீட். செவ்வாயன்று கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், வியாழன் மாலை ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடம் என எங்கள் பக்தி பரவசத்திற்கு காரணம் சொல்லத்தேவையில்லை. வயசு!
ஒரு வழியாக பாஸ் ஆகி, எல்லோரும் வெவ்வேறு ஊர்களில் வேலையில் அமர்ந்தாலும் வருடமொருமுறை சந்திப்பது வழக்கம். இவனைப்பார்க்க பம்பாயிலிருந்து ஆம்னி பஸ்ஸில் பெங்களூர் வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு சாகர் உடுப்பி ஓட்டலில் கேசரி, தோசை, கூர்க் காபி சாப்பிட்டு 'ப்ரிகேட் ரோட் ஹோகி' என மூன்று நாட்கள் ஆட்டோவில் சுற்றி ஸ்டோன்வாஷ் சட்டையெல்லாம் வாங்கித்தருவான். சில வருடங்களில் 'மீனம்மா... மீனம்மா..கண்கள் மீனம்மா' ஆர்க்கெஸ்ட்ரா பாடலுடன் மதுரையில் நடந்த இவனது திருமணத்தில் அதே நண்பர் குழாமோடு கலந்துகொண்டோம்.
பிறகு இவன் திருப்பூரில் இந்தியாவின் தலைசிறந்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து, CFA மற்றும் MBA படிப்புகளுடன் இன்று அந்நிறுவனத்தின் Group COO & CFO வாக இருக்கிறான். மற்ற CA நண்பர்கள் Ayyampillai Ponnusamy,Hidayathulla M. Ali, Arunmozhi Murugesan, குமார்,Navendan Natesan CT Subu எல்லோரும் சிங்கப்பூர், அபுதாபி, துபாய், பஹ்ரைன் என பறந்துவிட்டோம்.
சில வருடங்களுக்கு முன் சென்னையில் இவனை சந்திக்க எனக்கு ரொம்ப ஆச்சரியம். மூத்தவன் டாக்டராகி விட்டாலும் அதே இளமையுடன் இருக்கிறான்.
இன்று பிறந்தநாள் காணும் நண்பன்Subramanian Rajaseharanக்கு பென்சில் ஓவியத்துடன் வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment