காலை சுமார் பன்னிரெண்டு மணிக்கு Ramakrishnan Venkataraman(முரளி) யிடமிருந்து குறுஞ்செய்தி.. 'அல் கோபாரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறேன்.. லஞ்சுக்கு போலாமே'யென. கூடவே நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar உம் தொலைபேசியில் லஞ்ச் சாப்பிட அழைத்தார். முரளி சங்கரின் மைத்துனர். ஆப்பிரிக்காவிலிருந்து சமீபத்தில் சவுதிக்கு மாற்றிக்கொண்டு வந்தவர்.சங்கருக்கு பிடித்த சரவணபவனில் மதியம் சந்திப்பதாக முடிவானது.
அவரது குடும்பம் மற்றும் நண்பர் சங்கர் குடும்பத்துடன் சென்ற வெள்ளியன்று ஒரு நாள் முழுவதும் இனிமையாக கழித்தது மறக்க முடியாத அனுபவம்.
அவரது குடும்பம் மற்றும் நண்பர் சங்கர் குடும்பத்துடன் சென்ற வெள்ளியன்று ஒரு நாள் முழுவதும் இனிமையாக கழித்தது மறக்க முடியாத அனுபவம்.
சரவணபவன் க்விக் லஞ்ச், பாயசம், ஐஸ்க்ரீம் முடித்து, நேராக சங்கர் வீட்டுக்கு போய் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அரட்டையடித்தபின் சங்கரின் மனைவி கல்பனா கொடுத்த அருமையான ஃபில்டர் காபி குடித்தபின், மாலை ப்ராம்கோ கோவிலுக்கு போவதாக முடிவானது.
ப்ராம்கோ எனப்படும் கற்பாறை உடைக்கும் தொழிற்சாலையில் தான் அந்த அம்மன் கோவில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வசிக்கும் லேபர் குவார்ட்டர்ஸ் நடுவே உள்ள கோவிலை தினமும் பராமரிப்பது கம்பெனி தொழிலாளர்கள் தான். நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி எண்ணெய்க்கிணறுகள் உள்ள பாலைவனப்பகுதியில் கோவில் இருந்தாலும், செவ்வாய், வெள்ளியன்று அங்கே போனால் குர்த்தா பைஜாமாவுடன் பாதி பஹ்ரைன்வாசிகளை பார்க்கலாம்.
ஹார்மோனியம், தபலா, டோலக் சகிதம் அமர்க்களமாக ஹனுமான் சாலிஸா மற்றும் ராம், ஷிவ் சங்கர் பஜன்கள் பாடுவார்கள். கணேஷ், சாய்பாபா, ஷிவ், காளி மாதா, தேவி, ராம் லக்ஷ்மன், ஐயப்பா, பஜ்ரங் விக்கிரகங்கள், சிவலிங்கம் என களை கட்டும் கோவில். நெற்றியில் செங்குத்தாக திலகமிட்டு, கையில் பூஜாரி கட்டிவிடும் கயிறுடன் கப்பர்சிங் மாதிரி வெளியே வருவோம்.
கோவிலுக்கு வெளியே வந்ததும் சீக்கியர்களின் குருத்வாரா. அங்கு குரு க்ரந்த் சாஹிப் மற்றும் தசம் க்ரந்த் படித்து பஜன் நடக்கும். தலையை மறைக்க நமக்கு சிறு துண்டும் நெய் வாசனையுடன் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள்.
கோவிலுக்கு வெளியே தரையில் சுமார் 600, 700 பக்தர்களை உட்கார வைத்து சப்பாத்தி, சன்னா, கீ சாவல் (நெய் அரிசி) , மசாலா சாய் என வயிறு முட்ட மகா பிரசாதம் சாப்பிட்டு திரும்ப 20 கிமீ. தொலைவிற்கு வண்டி ஒட்டி வரும்போது தூக்கம் சொழட்டியடிக்கும்.
அன்று எங்களுக்கு மினி பிரசாதம் (சன்னா, ரோஸ்மில்க்) தான் கிடைத்தது. கோவிலை முடித்துவிட்டு எல்லோரும் எங்கள் இல்லத்திற்கு போனோம். சங்கரின் சுவாரசியமான இளம்பிராய தகவல்களை அவரது சகோதரி மாதங்கி பகிர்ந்துகொண்டார்.
நண்பர் முரளி மாதங்கி தம்பதிகளுக்கு அன்று திருமணநாள் என்பதால் கேக் வெட்டி, செல்ஃபி எடுத்து இரவு உணவு முடித்து எங்கள் அரட்டை கச்சேரி ஆரம்பம்..
சங்கருடன் அரட்டையென்றால் வேறென்ன! திருச்சி பற்றிய பேச்சு தான்....
மைக்கேல் ஐஸ்க்ரீம் கடையிலிருந்து நான்கு கடை தள்ளி ஜகந்நாதன் புக் டெப்போ வீட்டாரின் பையன் (எனது சி.ஏ. நண்பன்) அலாஷியஸ்,Aloysius James
அவனது பெரியம்மா( செல்லா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்) சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி பிரின்சிபாலாக இருந்தது,
வக்கீல் விருத்தாசலம் ரெட்டியார் பையன் பரணி (குப்புசாமி டீச்சரிடம் டியூஷன்),
என்னுடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்திட்ட ஶ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் காமாட்சிநாதன்,
ஆடிட்டர்கள் சந்தானம், செல்வராஜ், கிருஷ்ணசாமி ஜகந்நாதன், ஜி.பி(GB), குமார்ராஜ்...
சி.ஏ. ராங்க் வாங்கிய சதாசிவம், அவன் தங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுரேஷ், (திருமணத்திற்கு முன் அமெரிக்கா போகும்போதும் வரும்போதும் பம்பாயில் எங்கள் செட்டாநகர் ஃப்ளாட்டில் தங்கும் சுரேஷ் எங்களுக்கு அமெரிக்க சாக்ஸ் வாங்கி வருவான்)
எனது ரூம்மேட் ரங்கு என்கிற பாஷ்யம் ரங்கநாதன்(அம்மா மண்டபம்),
ரங்குவிற்கு தெரியாமலேயே அவனது பெரியம்மா பெண்ணை சி.ஏ. படிக்கும்போதே காதலித்த ஶ்ரீரங்கம் முரளி,
க்ராஃபோர்ட் (கிராப்பட்டி) லிருந்து தினமும் ஸ்கூல் ( St. Joseph's) வரும் என் க்ளாஸ்மேட் ரங்க பிரசாத்,
கூடவே வரும் குட்டி குட்டியாக அவனது சகோதரர்கள் பார்த்தசாரதி Ananthasayanam Thiruvenkatachary (இவர் தற்போது திருச்சி BHEL இல் பொது மேளாளர்),
மற்றும்கூடவே வரும் குட்டி குட்டியாக அவனது சகோதரர்கள் பார்த்தசாரதி Ananthasayanam Thiruvenkatachary (இவர் தற்போது திருச்சி BHEL இல் பொது மேளாளர்),
மறந்து போன சிலபல பழைய அக்ரஹாரம் நண்பர்கள்,
'உங்களுக்கு இவனைத்தெரியுமா.. அவனைத்தெரியுமா'வென விசாரிக்கப்பட்ட மதுரா லாட்ஜ் பக்கம், பட்டர்வொர்த் ரோடு, ஆண்டா ஸ்ட்ரீட் நண்பர்கள்,
காசு வாங்காமல் ஊசி போடும் கிலேதார் தெருவில் ஆசுபத்திரி நடத்தும் எனது மைத்துனர் டாக்டர் மனோகர்,
ஒரு நாளைக்கு மூன்று படம் பார்க்கும் சங்கர் நண்பர்கள்,
நந்திகோவில் தெரு ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் நண்பர்கள்,
ஆடிட்டர் முத்துகிருஷ்ணன் (செல்வம் ஹோட்டல் அதிபர்) அலுவலக நண்பர்கள்,
மன்னார்புரம் நால்ரோடு லாட்ஜில் தங்கி வில்ஸ் ஃபில்டரை மூன்றாக வெட்டி (சிக்கனமாம்) புகைத்தபடி ஐ.சி.டபுள்யு.ஏ பாடம் சொல்லிக்கொடுத்த மார்ட்டின்,
வெறும் முந்தைய வருட விடைத்தாள்கள் கொண்டு அவர் என்னை இன்டர் பாஸ் செய்ய வைத்தது,
வெறும் முந்தைய வருட விடைத்தாள்கள் கொண்டு அவர் என்னை இன்டர் பாஸ் செய்ய வைத்தது,
அக்கவுன்ட்ஸ் டியூஷன் எடுத்த ஜமால் முகமது பேராசிரியர் சுபான்கான்,
செயின்ட் ஜோசப்ஸ், நேஷனல், இ.ஆர். மேநிலைல்பள்ளி நண்பர்கள்,
சுந்தர் நகர் மற்றும் திருச்செந்துரை அக்ரஹார நாட்கள்,
நண்பர் Thiagarajan Arumugam உம் Saravanan Natarajanஉம் உறவினர்கள் போன்ற தகவல்கள்,
நண்பர்கள் Rajagopalan Trichy (கோபுலி) மற்றும் Ranganathan Kothandaraman பற்றி கொஞ்சம்,
வளைகுடா நாடுகளிலேயே ப்ளஸ் 2 வரை படித்து திடீரென சென்னை வந்திறங்கி சமாளிக்கும் எனது மற்றும் சங்கரின் பையன்கள்,
முரளியின் ERHS மற்றும் புட்டபர்த்தி கல்லூரி நாட்கள்,
எனது அலகாபாத் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நாட்கள், வருடம் முழுவதும் ஸ்ட்ரைக் நடத்தும் அலகாபாத் மாணவர்கள்,
பம்பாயில் சி.ஏ ஃபைனல் பரிட்சை படித்து ஃபெயிலாகி பாஸ் ஆன அனுபவங்கள்....
இரவு சுமார் 11.30 மணியளவில் வேறுவழியின்றி விடைபெற்றுக்கொண்ட முரளி, சங்கர் குடும்பத்தினரை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவிட்டு திருச்சி நினைவுகளை அசைபோட்டவாறே சுஜாதாவின் 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்' ( பெண் வேஷம், திண்ணா, பேப்பரில் பேர்) படித்துக்கொண்டே 12.30 க்கு மேல் அப்படியே உறங்கிப்போனேன்....
No comments:
Post a Comment